76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்!
அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் முதல் சிக்சரை அடிக்கவே 76 பந்துகளை எடுத்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று குஜராத் அணியை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி மட்டும் 72 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி வரை களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.

ஆர்சிபி அணி தரப்பில் ரஷிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் ஆர்சிபி அணி மொத்தமாக 3 சிக்சர்களை மட்டுமே அடித்திருக்கிறது. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஆட்டமிழந்த பின் குஜராத் அணியின் பேட்டிங் ஆமை வேகத்தில் தான் இருந்தது.
ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அசுரத்தனமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய குஜராத் பேட்ஸ்மேன்கள், இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை அடிக்கவே ஒட்டுமொத்தமாக 76 பந்துகளை எடுத்துக் கொண்டனர். அதுவும் ஆல்ரவுண்டரான அர்ஷத் கான் வந்துதான் முதல் சிக்சரை விளாசி தள்ளினார்.
பவுண்டரிகள் அடிக்கவே திணறிய குஜராத் அணி, இத்தனை பந்துகளை வீணடித்தது ஆர்சிபி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாகவும், குஜராத் ரசிகர்களுக்குப் பெரும் சோகமாகவும் அமைந்தது. 76 பந்துக்கு அப்புறம் தான் முதல் சிக்ஸரா? யோவ் டி20 ஃபைனல்யா இது? என ரசிகர்கள் பலரும் குஜராத் அணியை விளாசி வருகின்றனர்.
குறிப்பாக, இந்த விவகாரத்தை மட்டும் எப்படியாவது அந்த 15 வயசு சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி கண்ணுல படாம பார்த்துக்கோங்கப்பா.. என்றும் சோசியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 72 சிக்சர்களை விளாசி பல்வேறு சாதனைகளை உடைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications