இனி ஆர்சிபி அணியை யாராலும் தடுக்க முடியாது.. அகமதாபாத் வரலாறு அப்படி.. விராட் கோலிக்காக வெல்லுங்கள்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் 9 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை ஆர்சிபி அணி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 4வது முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஐபிஎல் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு கோப்பை உறுதி என்று பார்க்கப்படுகிறது.

RCB vs PBKS Why no other team can t beat RCB in Ahmedabad Stadium in the IPL Final 2025

அகமதாபாத் பிட்ச்

ஏனென்றால் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஃபிளாட் பிட்ச் அகமதாபாத் மைதானத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. முதல் 2 ஓவர்களில் மட்டும் கொஞ்சம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருந்தாலும், அதன்பின் மொத்தமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும். ஆர்சிபி அணியின் பேட்டிங் லைன் அப்பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் பட்டிதார், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா என்று இருக்கின்றனர்.

ஆர்சிபி பேட்டிங் ஆர்டர்

அதுமட்டுமல்லாமல் ஃபினிஷரான டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள். ஃபிளாட் பிட்ச்களில் இப்படியான ஒரு பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்துவது என்பதே கற்பனை செய்ய முடியாதது. ஏனென்றால் இந்த சீசனில் விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தாலும், மற்ற வீரர்களும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.

ஹேசல்வுட் பவுலிங்

முதல் பேட்டிங் ஆடினால் ஆர்சிபி அணியால் எளிதாக 220 ரன்கள் முதல் 240 ரன்கள் வரை குவிக்க முடியும். ஒருவேளை பும்ரா போன்ற ஒரு பவுலர் இருந்தால், அந்த ரன்களை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். அதேபோல் ஆர்சிபி அணியின் ஹேசல்வுட் டெஸ்ட் கிரிக்கெட் லெந்தில் வீசுவதால், எந்த பேட்ஸ்மேனாலும் ரன்களை குவிக்க முடியாமல் திணறுகின்றனர்.

விராட் கோலிக்காக வெல்லுங்கள்

அவருக்கு கிடைக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸை வைத்து எதிரணியின் டாப் ஆர்டரை மொத்தமாக முடித்துவிடுகிறார். இதனால் ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கால கனவு, இந்த சீசனில் நிகழும் என்று பார்க்கப்படுகிறது. விராட் கோலியின் கிரீடத்தில் ஐபிஎல் கோப்பை மட்டும் இன்னும் சேராமல் உள்ள நிலையில், இந்த சீசனில் அதனை ஆர்சிபி சாதிக்க வேண்டும் என்று ரசிகர்களும் விரும்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+