துபாய் ரோட்டில் அட அது யாரு பாருங்க.. ஜாலியாக சுற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்.! டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சூழலில், இந்திய வீரர்கள் துபாயில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே இந்திய வீரர்களான ரோஹித் மற்றும் குல்தீப் அங்குள்ள பிரபல ஸ்ட்ரீட் ஃபுட் கடையில் உணவு சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடச் சம்மதிக்கவில்லை. இதனால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது.

Champions Trophy 2025 India Cricket 2025

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இப்போது துபாயில் தங்கியுள்ளனர். இதற்கிடையே இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் துபாயில் சாலையோர உணவகத்தில் உணவு சாப்பிட்ட வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

கிரிக்கெட் நட்சத்திரம்

துபாயில் உள்ள பிரபல ஸ்ட்ரீட் ஃபுட் கடையான ராஜு ஆம்லெட்டில் இருவரும் சில் செய்து கொண்டே சாப்பிடும் வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது. இருவரும் அங்கு வந்திருக்கும் தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை கடைக்கு வெளியே கூட்டம் அதிகமாகவே இருந்தது. முதலில் பாதுகாப்பு கருதி வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்போதே அங்குக் கூட்டம் கூடிவிட்டது.

எங்கே போய் இருந்தனர்

இரு வீரர்களும் சாப்பிட்டு முடித்த பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது உள்ளே நுழைந்தவர்கள், ரோஹித் ஷர்மா உடன் போட்டோ எடுக்க ஆர்வம் காட்டினர். இதனால் ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் மெல்ல உணவகத்தில் இருந்து வெளியே வந்தனர். இது தொடர்பான வீடியோவை ராஜு ஆம்லெட் கடையே இணையத்தில் பகிர்ந்துள்ளது. அது வேகமாக டிரெண்டும் ஆகி வருகிறது.

கோலி

ரோஹித் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் மட்டுமின்றி முன்னாள் கேப்டன் விராட் கோலியும் கூட தீவிர உணவு பிரியர் ஆவார். சைவ உணவு முறையைப் பின்பற்றி வரும் விராட் கோலி, சமீபத்தில் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினார். தீவிர டயட் பின்பற்றும் கோலி, அன்று ஒரு நாள் மட்டும் டயட்டில் இருந்து விடுபட்டு சில்லி பன்னீரை ஆர்டர் செய்து ஒரு பிடி பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்தியா கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாகக் கோலி அட்டகாசமாக விளையாடி சதம் அடித்தார். இந்த போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு வெற்றிகளைப் பெற்றதால் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் மார்ச் 2ம் தேதி எதிர்கொள்கிறது. அதன் பிறகு மார்ச் 4ம் தேதி அரையிறுதி போட்டியையும் துபாய் மைதானத்திலேயே இந்திய அணி விளையாட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+