என்னாது விராட் கோலி ஓய்வா.. அந்த வீரரின் ஆதரவாளர்கள் செய்த சதி.. கிங் ரசிகர்கள் சொல்லும் பின்னணி!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை ரோஹித் சர்மாவின் நண்பரும் மற்றும் அவரின் பிஆர் குழுவினரால் பரப்பப்பட்டு வருவதாக விராட் கோலியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரோஹித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்க பிசிசிஐ நிர்வாகிகள், தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் முடிவு செய்திருந்தனர். இதனை ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

ரோஹித் சர்மா சில விளக்கங்களை அளித்த போதும், அவர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னரே, உடனடியாக இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆக்சிடண்டல் கேப்டனாக வலம் வந்த ரோஹித் சர்மா, அடுத்தடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடைந்த தோல்விகளே, இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது.
ஏனென்றால் பிசிசிஐ உடனான ஈகோ பிரச்சனை காரணமாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்து சாதாரணமாக வீரராக விளையாடி வருகிறார். இதனால் ரோஹித் சர்மாவிடம் வேறு வழியின்றி பிசிசிஐ கேப்டன்சியை ஒப்படைத்தது. அவரது தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை.
இந்த நிலையில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த 2 நாட்களில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகளுடன் விராட் கோலி ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் விராட் கோலிக்கு 36 வயது மட்டுமே ஆகி இருப்பதால், அவர் தாராளமாக 2 ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும்.
அதற்கான உடற்தகுதி விராட் கோலியிடம் தாராளமாக இருக்கிறது. ஃபார்ம் மட்டுமே பிரச்சனை என்றாலும், விரைவில் அதனை விராட் கோலி எட்டுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் ஓய்வு தகவலுக்கு பின்னணியில், ரோஹித் சர்மாவின் ஆதரவாளர்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது விராட் கோலி கேப்டனாக இருக்கும் போதே, ரோஹித் சர்மாவின் பிஆர் குழுவினர் ஏராளமான விமர்சனங்களை வைத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுடன் எப்போதும் வலம் வரும் பிரபல பத்திரிகையாளர் மூலமாக இந்திய அணியின் ஓய்வறை ரகசியங்கள் வெளியாகி வந்தது. இதனால் ரோஹித் சர்மா தான் ஓய்வறை ரகசியங்களை கசியவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பை ஏற்க முடியாமல் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பிஆர் குழுவினர் விராட் கோலியின் ஓய்வு தொடர்பான தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் பெயர் நிச்சயம் இருக்கும் என்று கிங் கோலியின் ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications