மீண்டும் நிரூபித்த ருதுராஜ்.. சதம் அடித்த கையோடு 66 ரன்கள் விளாசல்.. இந்திய அணியில் சேர்க்க டிமாண்ட்
கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட், இந்திய 'ஏ' அணிக்காக விளையாடி வரும் போட்டிகளில் தனது அசாத்திய ஃபார்மை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தற்போதைய போட்டியில், பொறுப்புடன் விளையாடிய அவர் 66 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
இதற்கு முந்தைய போட்டியில் அபார சதம் அடித்து மிரட்டிய ருதுராஜ், தற்போது அடுத்த போட்டியிலும் அரைசதம் கடந்து ரன் வேட்டையைத் தொடர்ந்துள்ளார். இவரின் இந்த அசுர ஃபார்ம் காரணமாக, அவரை மீண்டும் இந்திய முதன்மை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கிரிக்கெட் வட்டாரத்தில் வலுக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த போட்டியில் சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ருதுராஜ், இந்த போட்டியிலும் அந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தார். இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கி 66 ரன்கள் எடுத்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களுக்கான தனது ஆயத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய முதன்மை அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த ருதுராஜிற்கு, இந்த 'ஏ' அணி தொடர் தனது திறமையை நிரூபிக்கப் பெரும் பாலமாக அமைந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த அடுத்தடுத்த சிறப்பான ஆட்டங்களை அடுத்து, சமூக வலைதளங்களில் RuturajGaikwad என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜிற்கு உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் பிசிசிஐ நோக்கி கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். டாப் ஆர்டர் மட்டுமல்லாமல் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறங்கி ருதுராஜ் கெய்க்வாட் அசத்தி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் வீரர்கள் ஸ்பின்னர்களிடம் திணறி வருகின்றனர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்களை இடதுகையால் டீல் செய்து வருகிறார். இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்தால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறும் என்று பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications