மும்பை கிரிக்கெட்டின் அடுத்த அடையாளம்.. ஆயுஷ் மாத்ரேவுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்
மும்பை: யு19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி பாராட்டி இருக்கிறார். தனது கடைசி டெஸ்ட் தொடரில் அணிந்திருந்த ஜெர்சியை ஆயுஷ் மாத்ரேவுக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கி இருக்கிறார். இதனை பெற்றுக்கொண்ட ஆயுஷ் மாத்ரே, உடனடியாக அவரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அண்மையில் யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 411 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ் மற்றும் 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி தள்ளினார்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 311 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி யு19 உலகக்கோப்பையை 6வது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இந்திய ஜாம்பவான்கள் பலரும் வாழ்த்து கூறினர்.
இந்த நிலையில் இந்திய யு19 அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரேவை சச்சின் டெண்டுல்கர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து ஆயுஷ் மாத்ரேவை குடும்பத்தினருடன் சந்தார். அப்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். தனது கடைசி டெஸ்ட் தொடரில் அணிந்த ஜெர்சியை ஆயுஷ் மாத்ரேவுக்கு பரிசாக அளித்தார்.
இதனை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஆயுஷ் மாத்ரே, உடனடியாக சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது. அதேபோல் மும்பையில் இருந்து எந்த வீரர் உருவாகினாலும், உடனடியாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டுவார்.
ரோகித் சர்மா, பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோரை தொடர்ந்து ஆயுஷ் மாத்ரே மும்பையின் முக்கிய அடையாளமாக மாறுவார் என்று பலரும் கருதுகின்றனர். அதற்கேற்ப ஆயுஷ் மாத்ரேவும் உயரம் குறைவாக இருந்தாலும், ஷாட்கள் உருவாக்குவதில் வல்லவராக இருக்கிறார். இதனால் விரைவில் ஆயுஷ் மாத்ரே இந்திய அணிக்கும் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications