எந்த விதியாலும் தடுக்க முடியாது.. இந்திய அணிக்குள் வரும் வைபவ் சூர்யவன்ஷி.. நொறுங்கும் சச்சின் சாதனை

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஐசிசி விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் கிரிக்கெட் வீரர்களின் குறைந்தபட்ச வயதாக 15 வயது எட்டி இருக்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷி இன்று தனது 15வது பிறந்தநாளினை கொண்டாடி வரும் சூழலில், விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.

1990களில் எப்படி உலகம் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் ஒரு விவாதத்தையும், பிரமிப்பையும் உருவாக்கினாரோ, அதுபோல் வைபவ் சூர்யவன்ஷி உலகம் முழுவதும் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷியை கண்காணிக்கும் கண்கள் அதிகரித்தன.

Sachin Tendulkar

அதிலும் ஐசிசி யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ஆட்டம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஜாம்பவான்களையும் கூட அதிர வைத்தது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்து ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாஹம், பீட்டர்சன் உள்ளிட்டோரும் கூட வியந்தனர்.

அதிலும் இந்திய ஜாம்பவான் ஸ்ரீகாந்த், உடனடியாக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய டி20 அணியில் சேர்த்து விளையாட வைக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்க்க ஐசிசி விதிகள் தடையாக இருந்தது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் வீரர்களின் வயது குறைந்தபட்சம் 15ஆக இருக்க வேண்டும்.

இதனால் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்களாகும் என்று தெரிய வந்தது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி தனது 15வது பிறந்தநாளினை இன்று கொண்டாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 500 ரன்களுக்கு மேல் மட்டும் விளாசினால், இந்திய டி20 அணிக்குள் இடம் கிடைப்பது உறுதி.

இப்போது வைபவ் சூர்யவன்ஷி இந்திய டி20 அணிக்குள் கொண்டு வரப்பட்டால், அது அமெரிக்காவில் 2028ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்ஸ் தொடருக்கும் மிகப்பெரிய விளம்பரமாக அமையும் என்று பிசிசிஐ கணக்கு போட்டுள்ளது. இதனால் விரைவில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்குள் கொண்டு வரப்படுவார் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+