எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியாது.. வாழ்க்கை அப்படிதான்.. சஞ்சு சாம்சனின் மனைவி போட்ட பதிவு!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனின் ஆட்டம் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரின் மனைவி சாருலதா எழுதியுள்ள பதிவு டிரெண்டாகி வருகிறது. அதில் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து பதில் மறையத் தொடங்கும் போது, வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன் 43 பந்துகளில் 103 ரன்களை விளாசினார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 63 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்களையும் குவித்தனர்.

சொந்த ஊரான திருவனந்தபுரம் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் பொறுப்பி இஷான் கிஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு பெஞ்ச் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.
அதற்கேற்ப இஷான் கிஷன் அபாரமான ஃபார்மில் உள்ளார். 4 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 215 ரன்களை குவித்துள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் 5 இன்னிங்ஸில் வாய்ப்பு அளிக்கப்பட்டும் வெறும் 46 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட ஜாம்பவான்களும் கூட சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்ய வேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளனர்.
ஒரேயொரு தொடரில் சஞ்சு சாம்சன் சொதப்பியதால், அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 14 மாதங்களாக கேப்டன் சூர்யகுமார் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அப்போதெல்லாம் அவரை நீக்க வேண்டும் என்றோ, மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றே விமர்சனங்கள் எழவில்லை.
ஆனால் சுப்மன் கில்லை திடீரென தொடக்க வீரராக கொண்டு சஞ்சு சாம்சனின் நம்பிக்கையை இந்திய அணி சிதைத்தது. நீண்ட நாட்களுக்கு பின் முழு டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தொடக்கம் கொடுத்துள்ளார். இதில் சொதப்பியதால், டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்தே நீக்க வேண்டும் என்று சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலௌயில் சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில் சாருலதா, எல்லாம் முடிந்து பதில்கள் சொல்லி, அது மங்கி மறையும்போது, வாழ்க்கை அதன் போக்கில் செல்லட்டும் என்று விடுங்கள். ஏனென்றால் வாழ்க்கையை சில நேரம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்த போது சாருலதா மைதானத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது சஞ்சு சாம்சனுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட சாருலதாவின் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications