Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

55.71 சராசரி சாம்சன் இல்ல.. 24.33 சரிசாரி ஸ்கைக்கு வாய்ப்பு! உலகக்கோப்பை இந்திய அணியில் “பாலிடிக்ஸ்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் அணியில் சில வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகளில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் விளையாடப்போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

 Sanju Samson, Chahal, Ashwin not in the ICC Worldcup Indian Squad

அனுபவ வீரர்களான விராட் கோலி, முஹம்மது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர். பேட்டிங் வரிசையில் சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், பந்துவீச்சாளர்கள் முஹம்மது சிராஜ், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி தேர்வு மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் அதே அணியை அப்படியே பிசிசிஐ தேர்வு செய்திருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. குறிப்பாக சுழற்பந்துவீச்சில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சாஹலை சேர்க்காதது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

அக்‌ஷர் பட்டேலிடம் நல்ல பேட்டிங் திறன் இருப்பதால் அவரை தேர்வு செய்ததில் பிரச்சனையில்லை. இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா ஏற்கனவே உள்ள நிலையில், குல்தீப் யாதவுக்கு பதில் சஹாலை சேர்த்து இருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து உள்ளார்கள். பேட்டிங் ஆட தெரிந்து இருக்க வேண்டும் என்றால் அனுபவ வீரரான அஸ்வினை தேர்வு செய்திருக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் என 3 நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டர்கள் இருந்தும், ஓரளவு பேட்டிங் செய்யத் தெரிந்த பந்துவீச்சாளர்களாக இருக்க வேண்டும் என பிசிசிஐ எதிர்பார்ப்பது அணித் தேர்வின் மூலம் தெரிகிறது. எனவேதான், அர்ஷ்தீப் சிங் போன்ற உயரமான இடதுகை பந்துவீச்சாளர், 145 கிமீ வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக்கை விட்டுவிட்டு சுமாராக பந்துவீசும் ஷர்துல் தாக்கூரை தேர்வு செய்துள்ளார்கள்.

பும்ராவும் அணிக்கு திரும்பி இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஷமியை பெஞ்சில் அமர வைத்ததைபோன்று, உட்கார சொல்லிவிட்டு ஷர்துல் தாக்கூரை தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், பும்ராவைவிட அனுபவம் வாய்ந்த இந்திய அணி நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமிதான்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அவர் வீசிய பந்துகளை யாராலும் மறக்க முடியாது. மறுபக்கம் பேட்டிங் வரிசையை எடுத்துக்கொண்டால் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மேலும் நாட்களாகும் என்பதால், இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை தேர்வு செய்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதமும் தேர்வுக்குழுவுக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம்.

ஆனால், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்றோர் சேர்க்கப்பட்டு கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாததும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. நல்ல சராசரியை வைத்திருந்தும் தொடர்ந்து அவருக்கு ஓரிரு போட்டிகளில், அவரது பொசிசனை விட்டு மாற்றி மாற்றி பந்தாடி வாய்ப்பு அளித்துவிட்டு ஒதுக்குவதை பிசிசிஐ வேலையாக வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக இஷன் கிஷனை தவிர இந்திய அணியில் முழு நேர விக்கெட் கீப்பர்கள் இல்லை. கே.எல்.ராகுல் பகுதிநேர கீப்பர்தான். காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் அவரும், ஷ்ரேயஸ் ஐயரும் இன்னும் தங்கள் ஃபார்மை நிரூபிக்கவே இல்லை. இவர்களாவது, காயத்துக்கு முன் இவர்கள் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், சூர்யகுமார் யாதவ் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 24.33 என்ற சரிசாரியையே வைத்துள்ளார். டி20 போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக அவர் இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் 2 அரை சதங்களை தவிர அவர் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 55.71 என்ற சராசரியை வைத்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை சேர்க்கவில்லை.

இப்படி பெரிதும் எதிர்பார்த்து புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்சன், அஸ்வின், யுஜ்வேந்திர சாஹல் ஆகிய மூன்று பேருமே ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர்கள். பிசிசிஐ வெளியிட்டு உள்ள வீரர்கள் பட்டியலை பார்த்தால் அதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்திய அணி தேர்வில் பெரிய அரசியல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+