பெஞ்சில் இருந்தபோது.. சஞ்சு சாம்சன் என்னிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உண்மையை கூறிய கம்பீர்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் கடைசி 3 போட்டிகளிலும் அசத்தலாக ஆடிய சஞ்சு சாம்சன், அதற்கு முன் கம்பீர் உடன் நடந்த உரையாடல் குறித்து தெரிய வந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த வெற்றிக்கு பின், சஞ்சு சாம்சன் தொடர்பான விவாதத்தில் கம்பீர் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலமாக 3வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதேபோல் முதல்முறையாக அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பையின் ஹீரோவாக சஞ்சு சாம்சன் மாறி இருக்கிறார். ஏனென்றால் வாழ்வா சாவா போட்டிகளில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 97, 89, 89 என்று எந்த சுயநலமும் இல்லாமல் ஆடிய ஆட்டம் பலரையும் வியக்க வைத்தது. இதன் காரணமாக தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் தட்டிச் சென்றார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், பின்னர் தனது விஸ்வரூபத்தை எடுத்தார். இதுதொடர்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பதை அனைவரும் நன்றாக அறிந்திருந்தோம்.. அவர் மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை. அவர் திறமை மற்றும் பவர் ஹிட்டிங்கிற்கு ஈடு இணையே கிடையாது.
அவர் மட்டும் தொடக்கத்தில் சில ஓவர்களை கடந்துவிட்டால், முதல் 6 ஓவர்களிலேயே அந்தப் போட்டியின் விதியை நிர்ணயித்துவிடுவார். டி20 உலகக்கோப்பை தொடரின் போது நானும், சஞ்சு சாம்சனும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்தோம்.. அப்போது சஞ்சு சாம்சனிடம் ஜிம்பாப்வே போட்டியின் பிளேயிங் லெவனில் நீ இருப்பாய் என்று கூறினேன்..
அதற்கு சஞ்சு சாம்சன், அந்த வாய்ப்பு வரட்டும் என்று சாதாரணமாக பயிற்சி தொடர்ந்து கொண்டே இருந்தார்.. அந்த அளவிற்கு எளிதாக பேசி பழகக் கூடிய சுபாவம் கொண்டவர். அதேபோல் எங்களுக்கு இடையில் பயிற்சியாளர் வீரர்கள் என்ற எந்த இடைவெளியும் இருந்ததில்லை. அதேபோல் டாப் 3 வீரர்களும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டதாக நினைக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் டாப்பில் இன்னும் அதிரடி தேவைப்படுவதாக உணர்ந்தோம்.. அதேபோல் ஆஃப் ஸ்பின்னரை அட்டாக் செய்யவும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை.. அவரின் சிக்ஸ் ஹிட்டிங் திறமை தான் அவருக்கு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது என்று தெரிவித்துள்ளார். இதனால் கம்பீரின் பேட்டி ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications