ருதுராஜ், சஞ்சு சாம்சன் காலி.. தெறிக்கவிட்ட இளம் வீரர் ஆகாஷ் சிங்.. பேப்பரில் எழுதி இருந்தது என்ன?
லக்னோ: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் விக்கெட்டை லக்னோ அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங் கைப்பற்றியுள்ளார். அந்த விக்கெட்டுகளை கைப்பற்றிய பின் ஆகாஷ் சிங் ஒரு பேப்பரில், Akki on fire - டி20 கிரிக்கெட்டில் எப்படி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று எழுதி காட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சிஎஸ்கே அணி சார்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

லக்னோ அணி சார்பாக முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கினார். இதன்பின் 2வது ஓவரை வீச ஆகாஷ் சிங் வந்தார். இந்த சீசனில் ஆகாஷ் சிங் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அப்போது சிறுவனாக இருந்த ஆகாஷ் சிங், இப்போது இளைஞராக மாறி இருந்தார். இதனால் ஆகாஷ் சிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருந்தாலும் 3 ஓவர்கள் வரை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷம் காட்டாமல் ஆடிக் கொண்டிருந்தனர். ஆனால் ஆகாஷ் சிங் வீசிய 4வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அட்டாக் செய்ய முயன்று 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து சஞ்சு சாம்சன் அடுத்த ஓவரில் ஆகாஷ் சிங் பந்திலேயே விக்கெட்டை பறி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் உர்வில் படேலும் ஆகாஷ் சிங் ஷார்ட் பாலில் அடிக்க முயன்று விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் ஆகாஷ் சிங் கம்பேக் போட்டியில் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விக்கெட்டின் போதும் ஆகாஷ் சிங் தன்னிடம் இருந்த பேப்பர் ஒன்றை எடுத்து மைதானம் முழுக்க காட்டினார். அந்த பேப்பரில், Akki on fire - டி20 கிரிக்கெட்டில் எப்படி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலமாக தன் மீது நம்பிக்கை வைக்காத லக்னோ அணி நிர்வாகத்திற்கு ஆகாஷ் சிங் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆகாஷ் சிங் ஹார்ட் லெந்தில் பவுலிங் செய்வதோடு, நல்ல வேகத்தில் பந்துகளை வீசுகிறார். ஸ்விங், வேகம், பவுன்சர் என்று வெரைட்டியை வைத்திருப்பதால், விரைவில் சிறந்த வீரராக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications