இஷான் கிஷன் அல்லது திலக் வர்மா.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல் இல்லை.. கம்பீரின் நம்பிக்கையே காரணம்!
மும்பை: 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்திய அணி சிறப்பாக தயாராகி வரும் நிலையில், பயிற்சியிலும் அசத்தி வருகின்றனர். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் வீரர்களை இந்திய ஏ அணியில் தேர்வு செய்து, கேம் டைம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் ஃபார்மையும் இந்திய அணி கணக்கில் கொண்டே செயல்படுகிறது.
நேற்று அமெரிக்க அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடியது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்த திலக் வர்மா விளையாடினார். சிறப்பாக ஆடிய அவர், இன்று இந்திய அணியுடன் இணைய உள்ளார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மொத்தமாகவே 46 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஆனால் இளம் நட்சத்திர வீரரான இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 4 இன்னிங்ஸில் 215 ரன்களை குவித்துள்ளார். திலக் வர்மாவும் நல்ல ஃபார்மில் இருப்பதால், சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது.
அப்படி சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட்டால், இஷான் கிஷன் - அபிஷேக் சர்மா தொடக்கமும், திலக் வர்மா நம்பர் 3 பேட்டிங் வரிசையிலும் களமிறங்கக் கூடும். முதல் 3 பேட்ஸ்மேன்களும் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். அதேபோல் சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் என்று மொத்த பேட்டிங் வரிசையில் 2 வலதுகை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருப்பார்கள்.
இது இந்திய அணிக்கு சில சிக்கல்களை கொடுக்கலாம். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடது - வலது காம்பினேஷனில் நம்பிக்கை உள்ளது. இதனால் திலக் வர்மா இந்திய அணிக்கு திரும்பினாலும், நம்பர் 3 பேட்டிங் வரிசையில் மட்டுமே களமிறங்கக்கூடும். அங்கு ஏற்கனவே இஷான் கிஷன் மரண அடி, அடித்திருப்பதால், திலக் வர்மாவுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் இந்திய அணி குரூப் சுற்றில் அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது. இதனால் சிறிய அணிகளுக்கு எதிராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவரை ஃபார்முக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியும் அவர் ஃபார்முக்கு வரவில்லை என்றால், சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்படுவார் என்று கருதப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications