அந்த 2 பவுண்டரி.. சஞ்சு சாம்சன் ஹீரோவாக அடித்தளம் போட்ட சிவம் துபே.. மறந்துவிட்ட ரசிகர்கள்!
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் ஹீரோவாக மாறியதற்கு சிவம் துபே போட்ட அடித்தளமே காரணமாக மாறி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த போது களமிறங்கிய சிவம் துபே, 4 பந்துகளில் 10 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் சஞ்சு சாம்சன் பிரஷர் இல்லாமல் ஃபினிஷிங்கை செய்து முடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் கடந்த சில போட்டிகளாக இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஒரே இன்னிங்ஸில் மறக்க முடியாத நாயகனாக உருவெடுத்துள்ளார். உலகமே சஞ்சு சாம்சனை கொண்டாடி வருகிறது. சஞ்சு சாம்சனின் வாழ்நாள் இன்னிங்ஸ் இது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும் சஞ்சு சாம்சன் ஹீரோவாக மாறுவதற்கு சிவம் துபே அடித்தளம் அமைத்து கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 19வது ஓவரின் 2வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி கடைசி 10 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது. ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தியதால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் சிவம் துபே முதல் பந்திலேயே அந்த நம்பிக்கையை சுக்கு நூறாக்கினார். இதன்பின் ஒரு டாட் பால் ஆடிய சிவம் துபே, அடுத்த பந்தையும் பவுண்டரி ஆக்கினார். இதன்பின் கடைசி பந்தில் 2 லெக் பைஸ் ஓட, எளிதாக 4 பந்துகளில் 10 ரன்களை விளாசினார். இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற சூழல் உருவாகியது.
அப்போது சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசியும், 2வது பந்தில் பவுண்டரியை விளாசியும் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் சிவம் துபே பிரஷரை மொத்தமாக குறைத்ததை ரசிகர்கள் மறந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இப்படியான பிரஷர் சூழல்களில் இந்திய அணியின் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக சிவம் துபே மாறிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications