சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்க ரியல் காரணம் அதுதான்.. உடைத்து பேசிய விஹாரி!
சென்னை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் முறையில் வாங்கியதற்கான புதிய காரணத்தை இந்திய வீரர் ஹனுமா விஹாரி கூறியுள்ளார். தென்னிந்தியாவில் சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை பார்க்க மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக கூறிய விஹாரி, சிஎஸ்கே அணியின் அடையாளமான அவரை மாற்றப் போகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாக சஞ்சு சாம்சன் - ஜடேஜா டீல் மாறியுள்ளது. சிஎஸ்கே அணியின் அடையாளமாக இருந்த ஒரு வீரரையே தாரை வார்த்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்குவதற்கான காரணம் என்ன என்று ரசிகர்களும் கூட புரியாமல் இருக்கின்றனர். சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் விளையாட நினைத்தாலும், ஜடேஜாவை இழந்துவிட்டு வாங்க என்ன காரணம் என்று கோரி வருகின்றனர்.

ஏற்கனவே தோனிக்கு 44 வயதாகிவிட்ட சூழலில், சீனியர் வீரரான ஜடேஜாவை சிஎஸ்கே அணி கைவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு வீரர்களும் ஏராளமான கருத்துக்களை பேசிவிட்டனர். இந்த நிலையில் இந்திய வீரர் ஹனுமா விஹாரி புதிய கோணத்தை பேசி இருக்கிறார். அதில் ஹனுமா விஹாரி பேசுகையில், முதலில் ஒன்றை சொல்கிறேன். சிஎஸ்கே அணியின் முகமாக சஞ்சு சாம்சன் மாறப் போகிறார்.
அதற்கு தான் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி மிகப்பெரிய தொகையை கொடுத்து வாங்கி இருக்கிறது. தென்னிந்தியாவில் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஐபிஎல் என்பது வெறும் கிரிக்கெட் மட்டுமே என்று நினைத்தால், அது தவறு. ஏனென்றால் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் இன்னும் சில கணக்குகளை வைத்திருப்பார்கள்.
ஒரு வீரரால் எவ்வளவு டிக்கெட்டுகளை விற்பனை செய்து வைக்க முடியும் என்று எதிர்பார்ப்பார்கள். சாம்சன் எங்கு கிரிக்கெட் ஆடினாலும், கேரளா ரசிகர்கள் அங்கு குவிந்துவிடுவார்கள். இத்தனைக்கும் சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர் கூட இந்த சீசனில் தேவையில்லை. இருந்தாலும் சாம்சனை ஒப்பந்தம் செய்ததற்கு காரணம் அவர் மூலமாக சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ அதிகரிப்பதே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ குறைந்து கொண்டே செல்கிறது. மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் குவிந்துள்ள போதும், அம்பானி நிறுவனம் உரிமையாளராக இருந்த போதும் கூட தோனி ஒருவர் மூலமாக அவர்களுக்கு சிஎஸ்கே அணி கடும் போட்டியை பிராண்ட் வேல்யூவில் அளித்தது. ஆனால் கடந்த 2 சீசன்களாக ஆர்சிபி அணி அந்த இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாகவே சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications