40 வயதில் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.. யார் இந்த சோபி ஷைன்?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் தனது நீண்ட நாள் காதலியான சோபி ஷைன் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். 2023ஆம் ஆண்டு தனது முன்னாள் மனைவி ஆயுஷா முகர்ஜியை விவாகரத்து செய்த ஷிகர் தவான், சொந்த வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். தற்போது 40 வயதில் மீண்டும் காதல் திருமணம் செய்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் முக்கியமானவர் ஷிகர் தவான். ஏனென்றால் 2013 முதல் 2021 வரை ஷிகர் தவான் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வந்துள்ளார். இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசி இருக்கிறார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் டெல்லி, ஐதராபாத், மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி வந்தார். கடந்த சீசனுக்கு முன் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்தார். இதன்பின் ஷிகர் தவான் தனது தொழில் மற்றும் வர்ணனை பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு அவரின் சொந்த வாழ்க்கை ஒரு காரணமாக அமைந்தது.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆயிஷா முகர்ஜி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்து குழந்தையுடன் இருந்தவர். இதன்பின் இவர்கள் ஹர்பஜன் சிங் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஜோரோவர் என்ற மகன் பிறந்தார். ஆனால் 2023ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி இடையில் விவாகரத்து நடைபெற்றது. இருப்பினும் மகன் ஜோரோவரை பார்க்க முடியாமல் ஷிகர் தவான் சோகத்தில் இருந்தார். இந்த நிலையில் அயர்லாந்தைச் சேர்ந்த சோபி ஷைன் என்பவரை ஷிகர் தவான் சந்தித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இவர்களுக்கு இடையே அறிமுகம் நடந்தது. இதன்பின் இவர்கள் சில நாட்களில் காதலிக்க தொடங்கினர்.
தொடர்ந்து ஷிகர் தவான் - சோபி ஷைன் இடையில் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் ஷிகர் தவான் - சோபி ஷைன் இடையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படத்தை சாஹல் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்தி இருக்கிறார். சில நாட்களுக்கு முன் சோபி ஷைன் தனது ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
40 வயதில் ஷிகர் தவான் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த திருமண வாழ்க்கையில் ஷிகர் தவான் மகிழ்ச்சியாக இருக்க ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சோபி ஷைன் யார் என்பதையும் ரசிகர்கள் தேடி வருகின்றனர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பிராடக்ட் ஆலோசகராக இருக்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications