சிரிச்சதுதான் கஷ்டமா இருக்கு! ஏ ஏய்! ஒரு நிமிடம் அப்படியே எழுந்து நின்ற இஷான் கிஷன்! அலற விட்ட கோலி
சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மேட்சில் இந்தியா 3 விக்கெட்டை இழந்த பின் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடர் இதுவரை ஆரவாரம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் புதிய ஆரவாரமாக மாறி உள்ளது.
முக்கியமாக லோ ஸ்கோர் திரில்லர் மேட்ச்சாக இன்றைய ஆட்டம் உருவெடுத்து உள்ளது. இன்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆகி உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஜடேஜாதான் இன்று ஆட்டத்தை மாற்றினார். ஆஸ்திரேலியர்கள் ஹெல்மெட் அணியாதது அணியையே சாய்த்துள்ளது ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஹெல்மெட் அணியாமல் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டதால் விக்கெட்டுகளை இழந்து உள்ளனர். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இந்த தரமான பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. இந்த நிலையில்தான் அடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து உள்ளது.

இந்தியா பேட்டிங் விக்கெட்: டாஸ் வென்று பவுலிங் செய்த பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி வரிசையாக 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும் டக் அவுட் ஆனார். ஸ்டார்க் ஒரு விக்கெட், ஹேசல்வுட் இரண்டு விக்கெட் எடுத்து இந்தியாவிற்கு பிரஷர் கொடுத்தனர். இதையடுத்து கோலி, கே எல் ராகுல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி அடித்து நிதானமாக ஆடினார். இதில் கோலியும் ஒரு கட்டத்தில் கேட்ச் கொடுத்தார். 7,.3 ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. கோலி ஷார்ட் பந்தை சுற்றி அடிக்க அது மார்ஷ் மற்றும் கீப்பருக்கு இடையே பறந்து போய் விழுந்தது.

இரண்டு பேருமே ஒரே நேரத்தில் கேட்ச் பிடிக்க ஓடி வந்தனர். இரண்டு பேருக்கும் இடையில் பாகிஸ்தான் பீல்டரிங் போல பந்து விழுந்தது. இதை விட்டுவிட்டு மார்ஷ் சிரித்தார். இதை பார்த்தும் ஹேசல்வுட் முகம் கஷ்டர்ஹின் விளிம்பிற்கே சென்றது. இன்னொரு பக்கம் இஷான் கிஷன் இந்த கேட்சை மேலே சென்றதும் அப்படியே ஷாக் ஆகி சீட்டில் இருந்து எழுந்தார்.
கேட்ச் விட்ட பின்புதான் அவர் நிம்மதியாக அமர்ந்தார். இன்று ஆடும் அணியில், ரோஹித் சர்மா (கேப்டன் ), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications