Shreyas Iyer: இதுதான்டா கம்பேக்.. மக்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்னா சும்மாவா.. 53 பந்துகளில் 82 ரன்கள்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் ஹசாரே தொடரில் தொடரில் ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், 53 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 82 ரன்கள் எடுத்து மரண மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது உயிருக்கு ஆபத்தான வகையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், சுமார் 2 மாதங்கள் ஓய்வுக்கு பின் கிரிக்கெட் களம் திரும்பி இருக்கிறார்.

இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது காயம் அடைந்தார். கடைசி ஒருநாள் போட்டியின் போது கேட்ச் பிடிக்க பின் நோக்கி ஓடிய ஸ்ரேயாஸ் ஐயர், அதனை சரியாக பிடித்தார். ஆனால் கேட்ச் பிடித்த போது ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் பலமான காயம் ஏற்பட்டது.

Shreyas Iyer

இதன்பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்திற்கும் மேலாக ஸ்ரேயாஸ் ஐயர் சிகிச்சை பெற்று வந்த சூழலில், பின்னர் குணமடைந்து இந்தியா திரும்பினார். இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்பையில் குடும்பத்தினருடன் ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த மாதம் பயிற்சியை தொடங்கினார். இதனால் பெங்களூர் என்சிஏ-வில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஃபிட்னஸ் பொறுத்தே அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இன்று கம்பேக் கொடுத்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிரான போட்டி மழைக் காரணமாக 33 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. இதன்பின் மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில் 33 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்களை குவித்துள்ளது.

சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 53 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 82 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மக்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+