சுப்மன் கில் தரமான வீரர்.. யாருக்கும் சந்தேகமே இல்ல.. ஆனால்.. அஜித் அகர்கர் கொடுத்த அபார விளக்கம்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து துணைக் கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கு அவரின் மோசமான ஃபார்ம் காரணம் அல்ல என்றும், இந்திய அணியின் காம்பினேஷனே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்கவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை மண்ணில் நடக்கவுள்ளதால், இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனான சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அவரின் இடத்தில் இஷான் கிஷன் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, புதிய துணைக் கேப்டனாக அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு இந்திய அணி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் சுப்மன் கில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, இதுநாள் வரை சுப்மன் கில் துணைக் கேப்டனாக இருந்தார். சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாத போது, அக்சர் படேல் துணைக் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
தற்போது சுப்மன் கில் அணியில் தேர்வாகாததால், மீண்டும் அக்சர் படேல் வசம் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பரால் டாப் ஆர்டரில் விளையாட முடியும் என்ற போது, பேக் அப்பாக ஒரு விக்கெட் கீப்பரை மட்டும் எடுத்தால் போதும் என்று கருதினோம். ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டதில் அவரின் தவறு எதுவும் இல்லை.
அதேபோல் சுப்மன் கில் எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் காம்பினேஷனுக்காக சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை. சில நேரங்களில் வேறு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் போது. டி20 கிரிக்கெட்டை மிஸ் செய்ய வேண்டிய சூழல் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே சுப்மன் கில் இந்திய அணியின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தார்.
அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். நிச்சயமாக உலகக்கோப்பை நெருங்கும் போது, நிச்சயமாக சுப்மல் உச்சத்தில் இருப்பார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் நன்றாகவே ஆடி இருந்தார். அதனால் சுப்மன் கில் நீக்கத்திற்கு அவரின் ஃபார்ம் காரணம் அல்ல.. காம்பினேஷன் காரணமாகவே தேர்வாகவில்லை.
சுப்மன் கில் மிகச்சிறந்த வீரர். ஆனால் இப்போதைக்கு இந்திய அணியின் காம்பினேஷனுக்கு ஏற்ப ஒரு வீரர் தேவை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் சுப்மன் கில் கடைசியாக ஆடிய 18 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஃபார்மில் இல்லாததால், இந்திய அணி வேறு வழியின்றி சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்திருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications