154.2 கிமீ வேகம்.. துருவ் ஜுரெலை திணறடித்த குஜராத் வேகப்பந்துவீச்சாளர்.. யார் இந்த அசோக் சர்மா?
அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அசோக் சர்மா 154.2 கிமீ வேகத்தில் பந்துவீசி இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பந்தை எதிர்கொண்ட துருவ் ஜுரெல் ஒரு நொடி என்ன நடந்தது, பந்து எங்கு இருக்கிறது என்பதையே அறியாமல் திணறினார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் 42 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

அதேபோல் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். பவுலிங்கில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் மற்றும் அசோக் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் அசோக் சர்மா வீசிய ஒரு பந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 16வது ஓவரின் கடைசி பந்தை 154.2 கிமி வேகத்தில் அசோக் சர்மா வீசினார்.
கண் இமைக்கும் நொடியில் வீசப்பட்ட பந்தை எதிர்கொள்ள முடியாமல் துருவ் ஜுரெல் தடுமாறினார். ஒரு நொடி பந்து எங்கு உள்ளது, என்ன நடந்தது என்பதே புரியாமல் துருவ் ஜுரெல் க்ரீஸில் நிற்க, உடனடியாக எதிரில் இருந்த டோனவர் ஃபெரைரா அவரை வழிநடத்தினார். 23 வயதே ஆகும் அசோக் சர்மா 154.2 கிமீ வேகத்தில் பந்துவீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் அதிவேகமாக வீசப்பட்ட பந்தாகவும் இந்த பந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உம்ரான் மாலிக், மயங்க் யாதவ் உள்ளிட்டோர் அதிக வேகத்தில் வீசி உடனடியாக காயம் அடைந்தனர். ஆனால் அவர்களின் பவுலிங் ஆக்ஷனை ஒப்பிடும் போது அசோக் சர்மாவின் பவுலிங் ஆக்ஷனில் பெரிய சிக்கல் இல்லை. அதுமட்டுமல்லாமல் சிராஜை போல் Open Chested ரன் அப் வைத்திருக்கிறார்.
இதனால் அசோக் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா கண்காணிப்பில் இருப்பதால், அசோக் சர்மா சரியான இடத்திலேயே இருப்பதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த சீசனில் காயம் இல்லாமல் தப்பித்தால் அசோக் சர்மா எளிதாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications