ரூ.25 கோடி.. ஐதராபாத் அணி ஓனர் காவ்யா மாறன் பயன்படுத்துவது என்ன கார் தெரியுமா? வியக்கும் ரசிகர்கள்!
சென்னை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் 4 கார்கள் குறித்த விவரம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ.400 கோடியாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவரின் 4 கார்கள் மதிப்பு மட்டும் சுமார் ரூ.25 கோடியாக இருக்கிறது. பென்ட்லி, பிஎம்டபிள்யூ, ஃபெராரி ரோமா, ரோல்ஸ் ராய்ஸ் என்று உலகின் மிகப்பெரிய பிராண்ட் மற்றும் நட்சத்திர அந்தஸ்திலான கார்களை பயன்படுத்தி வருவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் நடக்கும் போதெல்லாம் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் குறித்து சோசியல் மீடியாவில் அதிக விவாதங்கள் நடக்கும். அவர் உடைகள், வெற்றி மற்றும் தோல்வியின் போது காவ்யா மாறன் கொடுக்கும் ரியாக்சன் உள்ளிட்டவை சோசியல் மீடியாவில் பேசுபொருளாகும். இம்முறை ஐதராபாத் அணியை கட்டமைத்த காவ்யா மாறனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மற்ற ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை போல் அல்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் மைதானத்தில் வந்து ஆதரவு அளிப்பதில் காவ்யா மாறனுக்கு நிகர் யாருமே கிடையாது. கடந்த 2 சீசன்களாக ஐதராபாத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே காவ்யா மாறனின் சொந்த வாழ்க்கை தொடர்பாக தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காவ்யா மாறன் பயன்படுத்தி வரும் கார்கள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் காவ்யா மாறன், எப்போதும் உயர் ரக கார்களிலேயே பயணிக்கும் வழக்கத்தை கொண்டவர். அந்த வகையில் அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.400 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப காவ்யா மாறனின் முதல் சாய்ஸ் காராக பென்ட்லி பென்டேகா EWB ரகம் இருந்து வருகிறது.
இந்த பிராண்டில் உருவாக்கப்பட்ட முதல் எஸ்யூவி கார் இதுதான். இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். அதேபோல் காவ்யா மாறன் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் 8 EWB ரக காரிலும் அதிகமாக பயணிப்பார். கோல்ட் மற்றும் பிளாக் நிறத்தினாலான அந்த காரின் மதிப்பு ரூ.12.2 கோடியாகும். அதேபோல் பிஎம்டபிள்யூ ஐ7 ரக காரை காவ்யா மாறன் வாங்கி இருக்கிறார்.
இந்த கார் சில்வர் மெட்டாலிக் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு மட்டும் ரூ.2.50 கோடியாகும். அதேபோல் இத்தாலி நிறுவனமான ஃபெராரி ரோமா ரக காரையும் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.3.61 கோடியாகும். சுமார் ரூ.25 கோடிக்கு 4 கார்களை வாங்கி காவ்யா மாறன் பயன்படுத்தி வருகிறார். அண்மையில் வெளியான வீடியோ காரணமாக காவ்யா மாறனின் கார்களின் விவரம் ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications