பந்துக்கு வலிக்காமல் பவுலிங் செய்த SRH.. நிதிஷ் ரெட்டிக்கு முதல் ஓவர் கொடுத்தால்! பாவம் காவ்யா மாறன்
பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் ஆர்சிபி அணி சேஸிங் செய்திருக்கிறது. இதனால் ஐதராபாத் அணி பவுலர்கள் பந்துக்கு வலிக்காமல் பவுலிங் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஆர்சிபி அணி. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷனின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 80 ரன்களையும், அனிகேட் வர்மா 43 ரன்களையும் எடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டிவிட்டது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்களையும், விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்களையும் குவித்தனர். கேப்டன் ரஜத் பட்டிதார் 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலமாக ஆர்சிபி அணி வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை தொடங்கி இருக்கிறது.
ஆனால் ஐதராபாத் அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்ததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எந்தவொரு ஐபிஎல் அணியும் நிதிஷ் குமார் ரெட்டி முதல் ஓவரை வீச வருவார் என்று கனவிலும் நினைக்காது. பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற திட்டம் இருந்திருந்தால், இஷான் கிஷன் அப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்க மாட்டார்.
இது போதாதென்று 5வது ஓவரிலேயே உனாத்கட் அட்டாக்கில் வந்தார். அப்போதே ஐதராபாத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்று சொல்லலாம். அதேபோல் அனுபவம் இல்லாத ஹர்ஷ் துபேவும், 7வது ஓவரில் ஹர்சல் படேலும் அட்டாக்கில் வந்தனர். இப்படியொரு பவுலிங் லைன் அப்பை வைத்து கொண்டு பெங்களூர் மண்ணில் டிஃபெண்ட் செய்வதெல்லாம் அசாதாரணமான விஷயம்.
இந்தப் போட்டிக்காக காவ்யா மாறன் பெங்களூர் மைதானம் வந்து பார்த்திருப்பது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த சீசனிலும் ஐதராபாத் அணிக்கு தோல்வி உறுதி என்று பேசத் தொடங்கிவிட்டனர். இதனால் பேட் கம்மின்ஸ் விரைவில் ஐதராபாத் அணியில் இணைய வேண்டும் என்றும் ஐதராபாத் அணி ஆதரவாளர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications