சஞ்சு சாம்சனுக்கு ஜாக்பாட்.. முகமது சிராஜ் தான் பாவம்.. இந்திய வீரர்களின் பயிற்சியில் நடந்த சம்பவம்!
டெல்லி: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் நடக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே அபிஷேக் சர்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் நிலையில், அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கக்கூடும். அதேபோல் முகமது சிராஜ் இடத்தில் பும்ரா விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு சரிக்கு சமமாக விளையாடி வருவதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக நெதர்லாந்து, நேபாள், அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள் அணி வென்றிருந்தால், இந்த நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு சொந்த ஊர் சென்றிருக்கும்.

அதேபோல் ஆஃப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் பரபரப்பின் உச்சம் என்று சொல்லலாம். இந்த நிலையில் இந்திய அணி இன்று மாலை நமீபியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வயிற்று வலி காரணமாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். இன்றுதான் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் சூழலில், அவரை உடனடியாக பிளேயிங் லெவனில் சேர்க்க இந்திய அணி முயற்சிக்காது. அவருக்கு போதுமான ஓய்வு அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் முழுமையாக தயாராகி இருக்கிறார். அதற்கேற்ப 2 நாட்களாக நடைபெற்ற பயிற்சியில் சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவரை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அருகில் இருந்து கவனித்திருக்கிறார். அதேபோல் பும்ராவும் 2 நாட்களாக பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
சஞ்சு சாம்சனால் பழையபடி ஸ்கொயர் திசயில் அதிக ஷாட்களை விளையாட முடிந்திருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தொடக்கம் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. மறுமுனையில் பும்ரா தனது இடத்திற்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதனால் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பவுலிங் செய்த முகமது சிராஜ்-ஐ நினைத்து ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications