இப்படிதான் ஆறுதல் சொல்வீங்களா.. கிளென் பிலிப்ஸ் மனைவி செய்த செயல்.. மிரண்டுபோன இந்திய ரசிகர்கள்!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி சோகத்தில் இருந்த போது, கிளென் பிலிப்ஸ்க்கு அவரது மனைவி முத்தமிட்டு ஆறுதல் கூறிய சம்பவம் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. அரையிறுதி சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை நொறுக்கிவிட்டு முழு நம்பிக்கையுடன் அகமதாபாத் வந்த நியூசிலாந்து அணி, எதிர்பாராத வகையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை குவித்தது. இதனால் நியூசிலாந்து அணியின் பேட்டிங் பொறுப்பு முழுக்க முழுக்க ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோரின் தலையில் விழுந்தது. அதில் ஃபின் ஆலன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் கிளென் பிலிப்ஸ் ஒரு ஓவர் வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதேபோல் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்படும் கிளென் பிலிப்ஸ், அன்றைய நாளில் ஒரு கேட்ச்சையும் கோட்டைவிட்டார். இறுதியாக நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்திய அணி வீரர்கள் தங்களின் மனைவி மற்றும் காதலியுடன் கொண்டாட்டத்தில் இருக்க, நியூசிலாந்து அணி வீரர் ஒரு ஓரமாக தங்களின் மனைவியுடன் சோகத்தோடு நின்று கொண்டிருந்தனர். இந்தப் போட்டியின் போதே நியூசிலாந்து வீரர்களின் மனைவிகள் மைதானத்தில் சோகமாக அமர்ந்திருந்தனர். அதேபோல் கிளென் பிலிப்ஸ் கூடுதல் சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மைதானத்திற்குள் வந்த அவரின் மனைவி விக்டோரியா, கிளென் பிலிப்ஸ்க்கு முத்தம் கொடுத்து நீண்ட நேரம் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். சக வீரர்களான ரச்சின் ரவீந்திரா, கான்வே, சான்ட்னர் உள்ளிட்டோர் ஒன்றாக பேசிக் கொண்டிருந்த போதும், பிலிப்ஸ் அவாரின் மனைவியிடம் இருந்து நகரவே இல்லை.
The wives of Glenn Phillips and Ish Sodhi consoling them after the World Cup loss.
— Rohan💫 (@rohann__45) March 9, 2026
In that emotional moment, they hugged them and even kissed each other. 🥹❤️ pic.twitter.com/PVa1tFDMau
இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியாவும் மைதானத்திலேயே அவரின் காதலி மஹிகா சர்மாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது. தற்போது நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் - விக்டோரியா வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் இது சாதாரணம் என்றாலும், இந்தியாவில் இந்த கலாச்சாரத்திற்கு சாமானிய மக்கள் தயாராக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications