அபிஷேக் சர்மாவை பற்றி கவலைப்படுபவர்களை நினைத்தால் சிரிப்பா இருக்கு.. சூர்யகுமார் கொடுத்த அதிர்ச்சி!
மும்பை: நட்சத்திர ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மாவின் ஃபார்மை நினைத்து கவலைப்படுபவர்களை பார்த்தால் எனக்கு கவலை அளிப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக அபிஷேக் சர்மா என்ன செய்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறிய சூர்யகுமார் யாதவ், ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் நாளை தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவுள்ளதால், மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல் அபிஷேக் சர்மா இதுவரை 3 இன்னிங்ஸில் இதுவரை ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. 3 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.

அதேபோல் பவர் பிளேவின் முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மாவை வீழ்த்த ஸ்பின்னர்களை எதிரணிகள் பவுலிங் செய்ய வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள அபிஷேக் சர்மா தடுமாறி வருவதாகவும் பார்க்கப்படுகிறது. இதனை இந்திய அணி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்த போது, அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மாவின் ஃபார்மை நினைத்து கவலைப்படுபவர்களை எண்ணி நான் தான் கவலைப்படுகிறேன். யாரும் அபிஷேக் சர்மாவை நினைத்து கவலைப்பட தேவையில்லை.
ஆனால் அபிஷேக் சர்மாவை எதிர்த்து விளையாடப் போகும் அணிகள் வேண்டுமானாலும் கவலைப்படலாம். ஏனென்றால் இதுவரை அபிஷேக் சர்மா ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை. இதனை வைத்தே என்னுடைய பதிலை புரிந்து கொள்ள முடியும். அபிஷேக் சர்மா அடிக்க தொடங்கினால், என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில் இது சாதாரண விஷயம். இந்திய அணி அபிஷேக் சர்மா தன்னுடைய அடையாளத்துடன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவரும் முயற்சிக்கிறார். அது நடந்தால் சந்தோஷம்.. நடக்கவில்லை என்றால், நாங்கள் அதற்கேற்ப விளையாட வேண்டும். கடந்த ஓராண்டாக அபிஷேக் சர்மா எங்களை காப்பாற்றினார்.
தற்போது நாங்கள் அவரை காப்பாற்ற வேண்டும். பவர் பிளேவில் இந்திய அணி நன்றாக செயல்பட்டு வருகிறத்ய். குறைந்தபட்சமாக 50 ரன்களை எடுத்து வருகிறோம். இருதரப்பு டி20 தொடர்களில் 220 ரன்கள், 240 ரன்களை எடுத்தோம். ஆனால் ஐசிசி தொடர்களில் பிட்ச் வேறு மாதிரி இருக்கிறது. 4 போட்டிகளில் ஆடி இருக்கிறோம்.. அந்த 4 போட்டிகளும் வித்தியாசமானது. ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடவும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications