பாகிஸ்தான் செல்கிறதோ இல்லையோ.. இந்திய அணியால் அரையிறுதிக்கு வர முடியாது.. சீண்டும் முகமது ஆமீர்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினாலும் கூட, இந்திய அணியால் முன்னேறிவிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார். முகமது ஆமீரின் கருத்துக்கள் இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இங்கிலாந்து அணி மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை இறுதி செய்திருக்கும் சூழலில், இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. ஆனால் மற்ற 2 இடங்களில் எந்த அணி விளையாடும் என்ற கணிப்புகள் வெளியாகி வருகிறது.

இன்று பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நல்ல ரன் ரேட் உடன் பாகிஸ்தான் அணி வென்றால், எளிதாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையென்றால் நியூசிலாந்து அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும். மறுபக்கம் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நாளை நடக்க உள்ள ஆட்டத்தில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர். ஏனென்றால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் கூட 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த போது, கடைசி பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஹோல்டர் அசத்தலாக விளையாடி அணியை மீட்டெடுத்தார்.
இருந்தாலும் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கூடுதலாக தயாராகி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஆமீர் இந்திய அணியை சீண்டி இருக்கிறார்.
இதில் முகமது ஆமீர் பேசுகையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று கருதுகிறேன். அதேபோல் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுகிறதோ இல்லையோ.. இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேறிட முடியாது என்று கணித்துள்ளார். இதனால் முகமது ஆமீருக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications