இந்திய அணியால் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாது.. பாகிஸ்தானின் முகமது ஆமீர் சொன்ன பாயிண்ட்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர் கணித்திருக்கிறார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருப்பதை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அறிந்து, அதற்கேற்ப வியூகம் அமைக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றுடன் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகிறது. ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒரு குரூப்பாகவும், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு குரூப்பாக பிரிக்கப்பட்டுவிட்டன.

T20 World Cup 2026

நாளை முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது. இதில் 3 அணிகளுமே தரமான ஃபார்மில் உள்ளன.

இந்திய அணியால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணி விளையாட 4 போட்டிகளிலும் டாப் ஆர்டரில் இஷான் கிஷன் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளனர். இதனை இந்திய அணி எப்படி சரி செய்யும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஆமீர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எது என்ற கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன்படி முகமது ஆமீர் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

இந்திய அணியின் போட்டிகளை கூர்ந்து கவனித்தால், அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8 சுற்றில் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பார்க்கும் போது, எந்த அணியும் வீழ்த்திவிடும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+