டி20 உலகக்கோப்பை அட்டவணை.. இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது? சேப்பாக்கம் மண்ணில் எத்தனை போட்டி?
மும்பை: 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள போட்டிகள் குறித்து விவரமாக பார்க்கலாம். அதேபோல் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மற்றும் மைதானங்கள் குறித்தும் விரிவாக காணலாம்.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டு, மார்ச் 8ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்பதால், ஒவ்வொரு குரூப்பில் 5 அணிகள் இடம்பெற்று 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் டி20 உலகக்கோப்பைக்காக மொத்தம் 8 மைதானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, அகமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களும், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள 3 மைதானங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்திய அணி பிப்ரவரி 7ல் நடக்கும் தனது முதல் லீக் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்த்து மும்பையில் விளையாட உள்ளது.
இதன்பின் பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நமீபியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. பின்னர் பிப்ரவரி 18ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இதில் சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 8ஆம் தேthi நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. அதேபோல் பிப்ரவரி 10ஆம் தேதி சேப்பாக்கத்தில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணியும், பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி அமெரிக்கா - நமீபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது.
தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி நியூசிலாந்து - கனடா அணிகளுக்கு இடையிலான ஆட்டமும், பிப்ரவரி 19ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் - கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் சூப்பர் 8 சுற்றில் பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
