இதுக்கு மேலயும் திலக் வர்மா வேணுமா.. 4 இன்னிங்ஸிலும் சொதப்பலோ சொதப்பல்.. ரசிகர்கள் விரக்தி!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள படுதோல்விக்கு, நட்சத்திர பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்திய அணியில் சிவம் துபே மட்டும் பொறுப்புடன் விளையாடி 42 ரன்களை சேர்த்தார். இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி காரணமாக, அடுத்த 2 போட்டிகளும் நாக் அவுட் போட்டிகளாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏனென்றால் நெட் ரன் ரேட் மூலமாக மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் அபிஷேக் சர்மாவை காப்பாற்ற இஷான் கிஷனை முதல் பந்தை சந்திக்க வைத்ததே தவறானதாகும்.
இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் டக் அவுட்டாகினார். தொடர்ந்து வந்த திலக் வர்மாவோ கொஞ்சமும் பொறுப்பின்றி 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றிருக்கிறார். கடந்த 4 போட்டிகளாகவே திலக் வர்மாவின் ஆட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதல் 3 இன்னிங்ஸில் தலா 25 ரன்களும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்களும் சேர்த்திருக்கிறார்.
அத்தனையும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய ஆட்டம். இன்றைய மிக முக்கியமான போட்டியில் வெறும் 1 ரன்னில் வெளியேறி உள்ளார். அதேபோல் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட்டாகியதோடு, இன்றைய ஆட்டத்தில் வெறும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications