ப்ளீஸ்ங்க.. இந்தியா வர பயமா இருக்கு.. இலங்கைக்கு மாற்றுங்க.. ஐசிசியிடம் மீண்டும் கெஞ்சும் வங்கதேசம்
டாக்கா: டி20 உலககோப்பை போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. வங்கதேசம் விளையாடும் லீக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஆனால் இந்தியா வந்து விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஐசிசி அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் தான் தயவுசெய்து இந்தியாவில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் 2வது முறையாக ஐசிசிக்கு கடிதம் எழுதி உள்ளது.
ஆண்களுக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7 ம் தேதி தொடங்கி மார்ச் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நம் நாடும், இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது. வங்கதேசத்துக்கு நம் நாட்டில் மொத்தம் 4 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

கொல்கத்தாவில் பிப்ரவரி 7 ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணி, பிப்ரவரி 9ல் இத்தாலி, பிப்ரவரி 14ல் இங்கிலாந்து பிறகு பிப்ரவரி 17 ல் மும்பையில் நேபாள அணியை வங்கதேசம் எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டோம். எங்களுக்கான அனைத்து போட்டியையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் 4 நாட்களுக்கு முன்பு ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டது.
அதில், ‛‛தற்போதைய சூலில் இந்தியாவில் வங்கதேச அணியினரின் பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. இதனால் வங்கதேச அரசின் ஆலோசனை கருத்தில் கொண்டு எங்கள் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யாது. போட்டியை இலங்கைக்கு மாற்ற வேண்டும்'' என்று கூறியது.
இதற்கு ஐசிசி இன்னும் கிரீன் சிக்னல் அளிக்கவில்லை. அதேபோல் போட்டியை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற மாட்டோம் என்றும் கூறவில்லை. மாறாக வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஐசிசி சார்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கேட்கப்பட்டது.
இதையடுத்து இந்தியாவுக்கு ஏன் வந்து விளையாட முடியாது? என்பது தொடர்பாக விரிவாக ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2வது முறையாக கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதத்தில் வீரர்களின் பாதுகாப்பு குறித்து விரிவான தகவல்களை அனுப்பி உள்ளது. அதோடு இந்தியாவுக்கு பதில் வங்கதேச போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ‛‛எங்களின் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் ஆசிப் நஸ்ரூடன் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். அதன்பிறகு 2வது முறையாக ஐசிசிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தயாவில் பாதுகாப்பு சம்பந்தமாக உள்ள கவலைக்குரிய பகுதிகளை ஐசிசி அறிந்து கொள்ள விரும்பியது. அதனை சுட்டிக்காட்டியுள்ளோம்'' என்றார். இருப்பினும் அவர் கடிதத்தில் இருக்கும் சாராம்சம் பற்றி விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக ங்கதேசத்தில் தற்போது நம் நாட்டுக்கு எதிரான அவதூறு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு வன்முறையில் வங்கதேசம் சிக்கி தவித்து வருகிறது. இந்த வன்முறையில் இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் வங்கதேசத்துக்கு எதிராக நம் நாட்டில் ஆங்காங்கே போராட்டம் வெடித்தது.
மேலும் சமீபத்திய ஐபிஎல் மினி ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கேகேஆர் அணி ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிசிசியை உத்தரவின்படி முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கத்தால் கோபமடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு என்று கூறி நம் நாட்டில் விளையாட மறுத்து வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications