எல்லாம் சரியா இருக்கிறது தான் சந்தேகமா இருக்கு.. இந்தியா மேட்ச் பார்க்கும் போது இதுதான் தோணுது! மீம்
சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் வீழ்த்தவே முடியாத அணியாக இந்திய அணி உருவெடுத்து உள்ளது.
இதுவரை 8 போட்டிகளில் ஆடி உள்ள இந்திய அணி 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. 11 க்கு 11 போட்டிகளில் வெல்லும் தகுதியுடன் இந்திய அணி உள்ளது. இந்திய அணியை வீழ்த்த போகும் அந்த அணி எது என்பதே இந்த தொடரில் பெரிய கேள்வியாக உள்ளது. பேட்டிங்கில் எல்லாம் கவர் ஆகிவிட்டது. பவுலிங்கிலும் எல்லாம் கவர் ஆகிவிட்டது. இப்படி எல்லா பீல்டும் கவர் ஆகி உள்ளதால் கண்டிப்பாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

தொடர் வெற்றிகள்; 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
( ஜாதி! மீண்டும் மீண்டும் அந்த பேரை அழுத்தி சொன்ன ரோஹித்.. ஏன் இப்படி? பின்னணியில் பயங்கரமான காரணம்!)
தென்னாபிரிக்க தோல்வி; நேற்று தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் கூட இந்திய அணி எளிதாக வென்றது. இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடினர்.

இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது. 50 ஓவரில் 326/5 ரன்கள் எடுத்து இந்திய அணி மைதானத்தையே அதிர வைத்தது. முக்கியமாக கடினமான பிட்சில் 121 பந்தில் 101 ரன்கள் எடுத்தனர். அதேபோல் 87 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் விக்கெட் விழாமல் இரண்டு பேருமே நிலைத்து ஆடி 326-5 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தனர்.
இதையடுத்து இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 83-10 ரன்களுக்கு அவுட் ஆனது. ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு பிரஷர் போட்டார். 9 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இன்னொரு பக்கம் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 83-10 ரன்களுக்கு அவுட் ஆனது
மீம்: இந்திய அணியின் தொடர் வெற்றியை வைத்து நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள மீம் தற்போது டிரெண்டாகி வருகிறது. பாபநாசம் படத்துல IG ஆஷா சரத் ஒரு கட்டத்துல "எல்லாம் சரியா இருக்கிறது தான் சந்தேகமா இருக்கு"ன்னு சொல்வாங்க, இந்தியா மேட்ச் பார்க்கும் போது அது தான் தோணுது!! என்று அவர் மீம் போட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications