ஜாதி! மீண்டும் மீண்டும் அந்த பேரை அழுத்தி சொன்ன ரோஹித்.. ஏன் இப்படி? பின்னணியில் பயங்கரமான காரணம்!
சென்னை: நேற்று போட்டிக்கு பின்பாக பேசிய ரோஹித் சர்மா பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2023 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. மொத்தம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே பெறாத அணி என்றால் அது இந்திய அணிதான்.
இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடினர்.

தென்னாபிரிக்கா அணியில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் களமிறங்கினர்.
( மேட்சுக்கு நடுவே.. அப்படியே ஸ்டன் ஆகி.. சிலையாக நின்ற கோலி.. மிரண்ட மைதானம்.. என்ன நடந்தது?)
வெற்றி: இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது. 50 ஓவரில் 326/5 ரன்கள் எடுத்து இந்திய அணி மைதானத்தையே அதிர வைத்தது. முக்கியமாக கடினமான பிட்சில் 121 பந்தில் 101 ரன்கள் எடுத்தனர். அதேபோல் 87 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் விக்கெட் விழாமல் இரண்டு பேருமே நிலைத்து ஆடி 326-5 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தனர்.

இதையடுத்து இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 83-10 ரன்களுக்கு அவுட் ஆனது. ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு பிரஷர் போட்டார். 9 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இன்னொரு பக்கம் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 83-10 ரன்களுக்கு அவுட் ஆனது
ரோஹித் சர்மா பேட்டி; நேற்று போட்டிக்கு பின்பாக பேசிய ரோஹித் சர்மா ஷ்ரேயாஸ் ஐயர் பெயரை சொல்லும் போது மீண்டும் மீண்டும் அவரின் பெயரை ஐயர் என்று மட்டும் கூறி இருந்தார். பொதுவாக அவரை ஷ்ரேயாஸ் என்றுதான் அழைப்பார்கள். ரோஹித் சர்மாவும் அப்படித்தான் அழைத்து வந்தார். ஆனால் நேற்று ஏனோ மீண்டும் மீண்டும் ரோஹித் ஐயர் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார்.
அதேபோல் பொதுவாக விராட் என்று அழைக்கும் ரோஹித் நேற்று மட்டும் விராட் என்று சொல்லாமல் கோலி என்பதை மீண்டும் மீண்டும் சொன்னார். ஷ்ரேயாஸ் ஐயரை அவரின் ஜாதி பெயரில் மட்டுமே அழைத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்றுதான் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் ஜாதி பெயரை பயன்படுத்த கூடாது என்று கூறி இருந்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிசிசிஐ-க்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். கார்த்தி சிதம்பரம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதிப் பெயர்களைக் கைவிடுமாறு பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா நேற்று முழுக்க முழுக்க ஜாதி பெயரை வைத்து பேசினார். இவர் எந்த காரணத்திற்காக இப்படி கூறினார்.. அல்லது யாதார்த்தமாகத்தான் பேசினாரா என்ற விவாதம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications