யாரை பார்த்து கிண்டல் பண்ணீங்க? ரோஹித் சர்மா தந்த சம்மட்டி அடி பதில்.. டிரெண்டான மீம்ஸ்
சென்னை: நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது. அதன்பின் முதல் 7 ஓவர்கள் பவுலிங்கில் சொதப்பியது.
பின்னர் பேட்டிங்கிலும் கொஞ்சம் இந்தியா பயம் காட்டியது. அதை எல்லாம் தாண்டி சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நியூசிலாந்து அணியில், வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
டாஸ் தோல்வி மீம்ஸ்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் டாஸ் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதன் மூலம் 15 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி டாஸ் தோற்று உள்ளது. ஒரு காயின் டாஸை தொடர்ச்சியாக 15 முறை தோற்பது மிகவும் கடினம் ஆகும். ரோஹித் சர்மா டாஸ் தோற்றது இந்திய அணிக்கு சிக்கல் ஆனது.
Thank You #RohitSharma 🙏#INDvsNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/QxX5Ft6b2F
— Ex Bhakt (@exbhakt_) March 9, 2025
அதன்படியே தொடக்கத்தில் பாஸ்ட் பவுலிங்கில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. வேகமாக 60 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு பிரஷர் போட்டனர். ஆனால் அதன்பின் வருண் சக்ரவர்த்தி களமிறங்கி.. அவர் ஓவரில் இருந்தே ஆட்டத்தை மாற்றினார். முதல் 2 பந்துகள் விக்கெட் அருகே சென்று.. பின்னர் அதே ஓவரில் 5வது பந்தில் விக்கெட் எடுத்தார்.
Her: Say those magical words
— Sagar (@sagarcasm) March 9, 2025
Him: pic.twitter.com/55YBw2MGir
பேட்டிங் மீம்ஸ்
அதன்பின் வந்த ஜடேஜா, குல்தீப் என்று மாறி மாறி விக்கெட் எடுத்தனர். வருண் 2, குல்தீப் 2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல் 63, மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களை எடுத்து ஆட்டத்தை கொஞ்சம் சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 50 ஓவரில் நியூசிலாந்து அணி 251/7 ரன்கள் எடுத்தது.
Thank you KL and Shreyas Iyer 🔥 pic.twitter.com/YCk0HNMuiW
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) March 9, 2025
திணறல் அச்சம் மீம்ஸ்
அதன்பின் இறங்கிய இந்திய அணியில் இந்த முறை ரோஹித் கவனமாக ஆடினார். பைனல் முக்கியம் என்பதால் பொறுப்பை உணர்ந்து ஆடினார் . 83 பந்தில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 76 ரன்கள் எடுத்தார். 105 ரன்கள் வரை இந்திய அணி விக்கெட் இழக்காமல் ஆடியது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 7 ஓவர்கள் கேப்பில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
Rohit Sharma Ki Batting against Newzealand 💪🏼#INDvsNZ #ChampionsTrophyFinal pic.twitter.com/c36SlLPmUM
— Suresh Parmar® (@iamSureshParmar) March 9, 2025
சுப்மான் கில், 18.4 ஓவரில் அவுட் , விராட் கோலி, 19.1 ஓவரில் அவுட்.), ரோஹித் சர்மா, 26.1 ஓ. என்று 7 ஓவரில் ஆட்டமே மாறியது. 105 ரன்களுக்கு விக்கெட் இல்லாமல் 122 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலை வந்தது. ஆனால் அதன்பின் ஷ்ரேயாஸ் 48, அக்சர் பட்டேல் 29 என்று ஆட்டத்தை மாற்றினர்.
moment hai bhai moment ❤️🇮🇳 pic.twitter.com/13S73htdbY
— Rajasthan Royals (@rajasthanroyals) March 9, 2025
ரோஹித் சாதனை பதிலடி மீம்ஸ்
கடைசியில் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் எப்போதும் போல கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
Welcome to the club, Rohit Sharma 🏆🏆🏆#INDvNZ #ChampionsTrophy2025 #RohitSharma pic.twitter.com/1M7oU3Lq1F
— Sport360° (@Sport360) March 9, 2025
இதன் மூலம் ரோஹித் சர்மா செய்த சாதனையை குறிப்பிட்டும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
𝐑𝐎-𝐊𝐎 🥹❤️#RohitSharma #ViratKohli #INDvNZ #ChampionsTrophy pic.twitter.com/9RZGRVHkVr
— Punjab Kings (@PunjabKingsIPL) March 9, 2025
Scenes at the end of the tournament meeting 😂 #INDvNZ #ChampionsTrophy pic.twitter.com/JOkKjMDIR1
— Wasim Jaffer (@WasimJaffer14) March 9, 2025
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications