மாடர்ன் லுக்கில் வைபவ் சூர்யவன்ஷி.. ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் சந்திப்பு.. அப்போ அடுத்தது அதுதான்!
அகமதாபாத்: ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் ராஜஸ்தான் அணியின் 15 வயதான இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய ஹேட் கட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இந்த சீசனில் அதிக ரன்களை விளாசியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 776 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவை நேரில் சந்தித்துள்ளார். புதிய ஸ்டைலிஷ் ஹேர் கட் மற்றும் மாடர்ன் லுக்கில், ஜெய் ஷாவுடன் வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருக்கும் பிரத்யேகப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

தனது அறிமுக ஐபிஎல் சீசனிலேயே ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த 15 வயது சிறுவன், நடப்பு சீசனில் ஆரஞ்சு கேப்பை (Orange Cap) வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கையோடு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. புதிய ஹேர் கட்டுடன் ஜெய் ஷா அருகில் வைபவ் அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, "மைதானத்தில் மாஸ்... வெளியிலும் கிளாஸ்" என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்தமாக 776 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான 'ஆரஞ்ச் கேப்பை' கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் ஆரஞ்சு கேப் வென்ற முதல் வீரர் என்ற இமாலய உலக சாதனையை பீகாரைச் சேர்ந்த இந்த இளம் சிறுவன் தன்வசப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன், "டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையே வைபவ் தான்" என உருகிப் பாராட்டியிருந்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கியப் புள்ளிகளும், ஐசிசி தலைவருமே வைபவ்வை நேரில் அழைத்து வாழ்த்தியிருப்பது அவரது அசுர வளர்ச்சியை உணர்த்துகிறது.
இதனால் மிகக் குறைந்த வயதில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அலறவிட்டு, 776 ரன்களுடன் ஐபிஎல்-ஐ தன்வசப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் இந்திய சீனியர் அணியிலும் நீல நிற ஜெர்சியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications