15 சிக்ஸ், 15 பவுண்டரி.. உலகக்கோப்பை பைனலில் வெறியாட்டம்.. 175 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!
ஹராரே: யு19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 55 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, அடுத்த 25 பந்துகளில் 75 ரன்களை குவித்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி - ஆரோன் ஜார்ஜ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம்
இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி இணைந்தது. முதல் சில பந்துகளில் நிதானம் காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, அதன்பின் அதிரடிக்கு திரும்பினார். அதேஒபோல் ஆயுஷ் மாத்ரேவும் 4, 4, 6 என்று அதிரடியாக விளையாட, இந்திய அணி 8 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்து சென்றது.
ஆயுஷ் மாத்ரே அதிரடி
தொடர்ந்து மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி 6, 4, 4, 4 என்று அடுத்த ஓவரிலேயே விளாசினார். இதனால் 32 பந்துகளில் அவர் அரைசதத்தையும் எட்டினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பவுலர்கள் என்ன திட்டத்துடன் பவுலிங் செய்யலாம் என்பதே புரியாமல் திணறிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று பறந்து கொண்டே இருந்தது.
55 பந்துகளில் சதம்
அதிலும் ஃபர்ஹான் அஹ்மத் வீசிய 17வது ஓவரில் 6,6, 4, 6 என்று விளாசினார். இதனால் 55 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். எந்த பவுலர், என்ன பந்து என்ற கணக்கே இல்லாமல் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பேட்டை ஓங்கி கொண்டே இருந்தார்.
சாதித்த வைபவ் சூர்யவன்ஷி
71 பந்துகளில் 150 ரன்களை கடந்த சூர்யவன்ஷி, இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை எடுத்திருந்த போது, ஸ்லோயர் பந்தை கணிக்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் யு19 உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து வீரர்களின் செயல்
இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் நோக்கி நடந்த வந்த போது, ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் எழுந்து நின்று பாராட்டு கூறினர். இதனால் வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications