அட்ரா சக்க.. வைபவ் சூர்யவன்ஷியை அதுவரை பெரிய வீரராக ஏற்க மாட்டேன்.. தரமான இலக்கை நிர்ணயித்த தந்தை!
மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் வரை வைபவ் சூர்யவன்ஷியை தாம் ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று அவரின் தந்தை சஞ்சீவ் கூறியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைக்கும் வெற்றி வெறும் தொடக்கம் என்று மட்டுமே கூறிய அவரின் தந்தை, யு19 உலகக்கோப்பை வெற்றியின் கண்ணீரை அடக்க முடியவில்லை என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம்
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ஜாம்பவான் வீரர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து களத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால் 32 பந்துகளில் அரைசதம், 55 பந்துகளில் சதத்தை எட்டி ஆச்சரியம் கொடுத்தார்.
நெகிழ்ச்சியில் தந்தை
இதனால் வைபவ் சூர்யவன்ஷியை இந்த தலைமுறைக்கான வீரர் என்ற ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றி குறித்து அவரின் தந்தை சஞ்சீவ் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது. அதில் சஞ்சீவ் பேசுகையில், யு19 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் என் மகன் செல்ஃபோனில் அழைத்த போது, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
வெறும் தொடக்கம்
சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் இருந்தார். அதனால் உடனடியாக நான் உன்னிடம் பின்னர் பேசுகிறேன்.. இது உனக்கான தருணம்.. இதன்பின் மீண்டும் யு19 அணியில் விளையாட முடியுமா என்று தெரியவில்லை.. இந்த தருணத்தை கொண்டாடிக் கொள் என்று கூறிவிட்டேன். என்னை பொறுத்தவரை வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைக்கு இதுவொரு தொடக்கம் மட்டும்தான்.
அடுத்த இலக்கு என்ன?
அவர் சாதிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏராளமானவை உள்ளது. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வரையிலும், அவரை பெரிய கிரிக்கெட் வீரராக ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். டி20 யுகத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பணமும், பொருளும் அதிகமாக கிடைக்கும் சூழலில், வைபவ் சூர்யவன்ஷியை டெஸ்ட் கிரிக்கெட் நோக்கி கொண்டு செல்ல தந்தை நினைப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி
அவர் ஏற்கனவே யூத் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதிலும் அதிரடி ஆட்டத்தை விளையாடினாலும், கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவார் என்று நம்பப்படுகிறது. மேலும் டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications