இதெல்லாம் ரொம்ப ஓவர் விராட் கோலி.. அரைசதம் அடிக்க 37 பந்துகளா.. பில் சால்ட் அதிரடி வேஸ்ட்!
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் சீனியர் வீரர் விராட் கோலி அரைசதம் அடிக்க 37 பந்துகளை எடுத்து கொண்டுள்ள சம்பவம் விமர்சனத்தை பெற்றுள்ளது. 130 ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடித்ததை உணர்ந்த விராட் கோலி, அந்த அரைசதத்தை கொண்டாடவில்லை. இதன் காரணமாக பில் சால்ட்டின் அதிரடி வீணாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் விராட் கோலி - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. விராட் கோலி முதல் ஓவரிலேயே சிக்சருடன் அதிரடியை தொடங்கினார்.

அதன்பின் பில் சால்ட் கைகள் ஓங்கியது. அதில் சான்ட்னர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 23 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பில் சால்ட் 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆனால் விராட் கோலி பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் ரன்கள் சேர்க்க தடுமாறினார். 19 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்திருந்த விராட் கோலி, கியரை மாற்றவில்லை.
அடுத்த 18 பந்துகளில் வெறும் 25 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் விராட் கோலி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியாக 38 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 130ஆக இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருந்ததால், விராட் கோலியும் அரைசதத்தை கொண்டாடவில்லை.
விராட் கோலியின் மந்தமான ஆட்டத்தால் ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோரின் அதிரடியும் வீணாகி இருக்கிறது. ஏனென்றால் அதிரடியாக ஆடிய பில் சால்ட் 36 பந்துகளில் 78 ரன்களையும், ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் 53 ரன்களையும் விளாசினர். ஆர்சிபி அணிக்கு ஆங்கர் பேட்ஸ்மேன் தேவையே இல்லை. அதனை விராட் கோலியும் உணர்ந்தே இருந்தார்.
ஆனாலும் வான்கடே போன்ற பேட்டிங் பாரடைஸ் விக்கெட்டில் விராட் கோலி தடுமாறி இருக்கிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை குறைந்தது 29 பந்துகளுக்குள் அரைசதம் அடித்தால் மட்டுமே அந்த அணிக்கு பிரயோஜனமாக இருகும். அதிலும் தொடக்க வீரராக வருவோர், 25 பந்துகளுக்குள் அரைசதத்தை எட்டினால், அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க உதவியாக இருக்கும். விக்கெட் கைவசம் இருந்த போதும் விராட் கோலி சொதப்பி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications