ஐபிஎல்லை விடுங்க.. மேட்சுக்கு மட்டும் தோனி இந்த கோலத்தில் வந்தால் அவ்வளவுதான்.. உலுக்கிய ஒரு போட்டோ
சென்னை: ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏற்பாடுகள் இப்போதே நடந்து வரும் நிலையில் தோனியின் முக்கியமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஐபிஎல் கேப்டன்கள் எல்லோரும் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில் தோனி மட்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார். சிஎஸ்கே அணி இந்த முறை முக்கியமான சில வீரர்களை அணியில் இருந்தே நீக்கி உள்ளது.
சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
டிரெண்டான புகைப்படம்; ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏற்பாடுகள் இப்போதே நடந்து வரும் நிலையில் தோனியின் முக்கியமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஐபிஎல் போட்டிகளுக்கு முன் தோனி புதிய லுக்கில் வருவார். அவரின் தோற்றம் ஒவ்வொரு தொடருக்கும் முன் மாறும்.
சில சமயங்களில் அவர் தாடி வைத்து இருப்பார், கலரிங் முடி வைத்து இருப்பார், மிக மிக கொஞ்சமான முடியுடன் இருப்பார். அந்த வகையில் இந்த சீசனில் அவர் அதிக தாடி, முடி வைத்து சாமியார் போல வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நீளமான முடி, தாடியுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவசாயத்தில் கவனம்: ஐபிஎல் கேப்டன்கள் எல்லோரும் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில் தோனி மட்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள தோனியின் 'ஈஜா' பண்ணையானது 43 ஏக்கரில் ஸ்ட்ராபெரி, கேப்சிகம், டிராகன் பழம், தர்பூசணி, முலாம்பழம், பட்டாணி மற்றும் மற்றொரு காய்கறிகளுடன் தற்போது பண்ணையில் பயிரிடப்பட்டு வருகிறது. இதில்தான் தோனியும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஐபிஎல் லிஸ்ட்: இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக வீரர்களை "ரிடென்ஷன்" செய்யும் லிஸ்ட் சமீபத்தில் வெளியானது.
டெல்லி அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ்ம், இஷாந்த் குமார் ஷர்மா, யகேஷ் துஷ் ஷர்மா, . வெளியிடப்பட்ட வீரர்கள்: ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.
What will be your reaction when MS Dhoni comes to play #IPL2024 with long hairs? pic.twitter.com/L8BGCAuAYa
— Hustler (@HustlerCSK) November 27, 2023
ராஜஸ்தான் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (சி), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சால்ட் , ஆடம் ஜம்பா. விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப். டிரேட் செய்யப்பட்ட வீரர்: அவேஷ் கான்












Click it and Unblock the Notifications