ஆஸ்திரேலியா அவுட்? உலகக் கோப்பையில் இவங்க 4 பேர்தான் செமி பைனலிஸ்ட்? சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த நாடு
சென்னை: 50 ஓவர் உலகக் கோப்பை 2023 தொடரில் செமி பைனலுக்கு செல்ல போகும் நாடுகள் எது எது என்ற கணிப்பு வெளியாகி உள்ளது. பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் இந்த கணிப்பை வெளியிட்டு உள்ளார்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. பல சுவாரசிய திருப்பங்களுடன். எதிர்பாராத வெற்றிகளுடன் இந்த தொடர் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நடந்த 3 முக்கியமான திருப்பங்கள் என்று பார்த்தால் அது பாகிஸ்தானின் பார்ம். இரண்டாவது தென்னாபிரிக்காவின் அதிரடி வெற்றிகள். கடைசியாக ஆஸ்திரேலியாவின் மோசமான பார்ம்.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா தொடங்கி மற்ற நாடுகள் வெற்றிபெறுவது எல்லாமே ஓரளவு கணிக்கப்பட்டதுதான். ஆனால் எதிர்பாராமல் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளன.
இலங்கை வெற்றி: சமீபத்தில் பாகிஸ்தான் இலங்கை மேட்ச் நடந்தது. இதில் முதலில் இறங்கிய இலங்கை அணி குஷால் மெண்டிஸ் அதிரடியால் 344 ரன்களை எடுத்தது. குஷால் இதில் 122, சமரவிக்ரம் 108 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதையடுத்து இறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து அவுட்டாகி தோல்வி அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தானின் டாப் ஆர்டரில் பாபர், இமாம் உல் ஹக் அவுட் ஆனாலும் கூட அப்துல்லா., ரிஸ்வான் கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி வந்தனர். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய அப்துல்லா 103 பந்தில் 113 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் உடல் முழுக்க அடியை வாங்கிக்கொண்டு ரிஸ்வான் 131 ரன்களை 121 பந்தில் எடுத்தார். இதன் மூலம் எட்டமுடியாத இலக்கு என்று நினைக்கப்பட்ட 345 ரன்களை வெறும் 48.2 ஓவரில் எடுத்து பாகிஸ்தான் வென்றது. இந்த நிலையில்தான் நெட்டிசன்கள் பலரும் பாகிஸ்தான் அணியிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா தொடர் தோல்வி: அதற்கு முன் இந்தியாவிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அதன்பின் நேற்று தென்னாப்பிரிக்கவிடமும் தோல்வி அடைந்தது. நேற்று முதலில் இறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 311/7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ஆஸ்திரேலியா பெரிதாக ஆர்வமே இன்றி மைதானத்தில் ஆடியது.

உலகக் கோப்பை நடக்கிறது என்ற ஆர்வமே இல்லாமல் அவர்களின் ஆட்டம் இருந்தது. 40.5 ஓவர் வரை திக்கி திணறி ஆடிய ஆஸ்திரேலியா வெறும் 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்ஆனது . இந்தியாவிற்கு எதிராகவும் 200 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன நிலையில் 2வது தோல்வியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு மேலே 9வது இடத்திற்கு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
செமி பைனலிஸ்ட்: இந்த நிலையில்தான் 50 ஓவர் உலகக் கோப்பை 2023 தொடரில் செமி பைனலுக்கு செல்ல போகும் நாடுகள் எது எது என்ற கணிப்பு வெளியாகி உள்ளது. பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஸ்ரீனி (srinimama) இந்த கணிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இவர்கள்தான் ஒருவேளை செமி பைனலுக்கு செல்வார்களா என்று கேட்டு உள்ளார். இதில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளே வந்து இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications