மும்பை மூத்தவரை வாங்க முடிவெடுத்த சிஎஸ்கே.. வெளியே தெரிந்தால் பூகம்பமே வெடிக்கும்.. ஷாக் பின்னணி
சென்னை: சிஎஸ்கே அணி மும்பை அணியை சேர்ந்த முக்கியமான ஒரு வீரரை அணிக்குள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இப்போதும் அந்த வீரர் சிஎஸ்கே அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீரரை எடுப்பது தொடர்பாக என்ன மாதிரியான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
2024 ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணிகள் முக்கியமான வீரர்களை ரீ டெயின் செய்துள்ளன. உதாரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி வாய்ப்பும் கொடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை அணியின் பிளான்: இதேபோல் சென்னை அணியும் முக்கியமான சில பிளான்களை ஐபிஎல்லை முன்னிட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி முக்கியமான ஒரு அணியில் இருக்கும் மிக முக்கியமான ஒரு வீரரை சிஎஸ்கே அணிக்கு எடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மட்டும் வெளியே தெரிந்தால் ஐபிஎல் தொடரில் பூகம்பமே வெடிக்கும் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சிஎஸ்கே அணி வட்டாரத்தில் விசாரித்ததில்.. சிஎஸ்கே அணி மும்பை அணியை சேர்ந்த மூத்த வீரர் ஒருவருக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தில் கேப்டனாக நியமிக்க வசதியாக ஒரு வீரரை அணிக்குள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே குறி வைத்த வீரர்: ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்து கேப்டன் ஆனதை அந்த வீரர் விரும்பவில்லை. இதனால் அவர் சிஎஸ்கே அணியுடன் தொடர்பில் இருக்கிறாராம். சிஎஸ்கே அணிக்கு வருவது பற்றி அந்த வீரர்தான் இரண்டு அணி நிர்வாகத்திடமும் பேசி உள்ளார். சிஎஸ்கே இதற்கு ரெடி. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி அந்த வீரரை சமாதானம் செய்ய ஆலோசனை செய்து வருகிறதாம். அதே சமயம் அந்த வீரர் இன்னமும் சிஎஸ்கே அணியுடன் நெருக்கமாகவே இருக்கிறார். பெரும்பாலும் எதிர்காலத்தில் அவர் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முக்கியமாக பல பெரிய வீரர்கள் பல அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ஏலம்: பொதுவாக ஐபிஎல் ஏலத்தின் போதுதான் வீரர்கள் மாற்றம் எல்லாம் விவாதம் ஆகும். ஆனால் இந்த முறை ஏலத்திற்கு முன்பாக ரிட்டென்ஷன் சமயத்திலேயே இந்த விவகாரம் டிரெண்டாகி உள்ளது. காரணம் ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் போன்ற முக்கிய வீரர்கள் அணி மாறியதே.
சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications