இவர்தான் "அண்டர்ரேட்டட்".. பும்ரா, பாண்டியா, கோலியை விடுங்க! இந்தியா வெல்ல காரணமாக இருந்த இன்னொருவர்
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெல்ல காரணம் கூட்டு அணி முயற்சி. கூட்டாக எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடியது அணிக்கு பெரிய அளவில் உதவியது. அதிலும் கடைசி 5 ஓவர்களில் நெக் டூ நெக் விட்டுக்கொடுக்காமல்.. ஆடியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இருந்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு வீரர் கொஞ்சம் கூடுதல் பங்கு வகித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 176-7 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய தென்னாபிரிக்கா திரில் ஆட்டத்தில் 169-8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கோலி பேட்டிங், ரோஹித் கேப்டன்சி, பும்ரா, அர்ஷிதீப், அக்சர் , பாண்டியா பவுலிங், சூர்யா பீல்டிங் என்று ஆல் ரவுண்டர் ஆட்டம் காரணமாக இந்திய அணி வென்றது.

இந்திய அணி வெற்றி: நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 9 ரன்கள், பண்ட் டக் அவுட் ஆக அதிற்சி கொடுத்தது. முக்கியமாக் ரோஹித் சர்மாவின் ஆட்டம்தான் நேற்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ரோஹித் சர்மா இந்த சீசன் முழுக்க சிறப்பாக ஆடினார். ஆனால் நேற்று அவர் அவுட் ஆக.. சீசன் முழுக்க சொதப்பிய கோலி நேற்று மட்டும் நம்பிக்கை அளித்தார். சூர்யா குமார் யாதவும் 3 ரன்களில் அவுட் ஆக அதன்பின் அக்சர் பட்டேல் அதிரடி காட்டினார். கோலி மெதுவாக ஆடி அரைசதம் அடிக்க, 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று அக்சர் படேல் 47 ரன்கள் எடுத்தார்.
கோலி அதிரடி: அப்படி இருக்க கோலி 50 ரன்களுக்கு பின் வேகம் காட்ட தொடங்கினார். 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக இல்லை., துபே கடைசியில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 176-7 ரன்கள் எடுத்தது. ஆனாலும் இந்திய அணி 15- 20 ரன்கள் குறைவாக எடுத்து இருந்தது. ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தின் பிட்ச் பேட்டிங் பிட்ச். சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. இது ஸ்லோ பிட்ச் கிடையாது. ஆனால் இந்திய அணி ஸ்லோ பிட்ச் போல் ஆடியது.
தென்னாபிரிக்க அணி அதிரடி: இதன்பின் இறங்கிய தென்னாபிரிக்க அணியில் அடுத்தடுத்து ஹென்றிக்ஸ், மார்க்கரம் அவுட் ஆக டி காக், ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினர்., ஸ்டப்ஸ் 31, டி காக் 39 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தது. வெறும் 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன்கள் கெல்சன் எடுக்க ஆட்டம் அப்படியே தென்னாப்பிரிக்க அணி பக்கம் சென்றது. அதிலும் 2 ஓவருக்கு முன்பாகவே தென்னாப்பிரிக்கா வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன்பின் வரிசையாக கெல்சன் விக்கெட், யான்சன் விக்கெட், மில்லர் விக்கெட்டுகளை எடுத்தது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நேற்று அணியின் வெற்றிக்கு டீம் கூட்டு முயற்சியே காரணம். இருந்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு வீரர் கொஞ்சம் கூடுதல் பங்கு வகித்து உள்ளார்.
அக்சர் பட்டேல்; அவர் அக்சர் பட்டேல். நேற்று மட்டும் என்று இல்லை இந்த சீசன் முழுக்கவே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அக்சர் பட்டேல் அதிரடி காட்டினார். அதிலும் நேற்று கோலி, ரோஹித் எல்லாம் பேட்டிங்கில் திணற, 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று அக்சர் படேல் 47 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் பவுலிங்கில் 4 ஓவரில் 49 ரன்களை கொடுத்து முக்கியமான ஸ்டப்ஸ் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை மாற்றினார். இந்த சீசன் முழுக்கவே ஆல் ரவுண்டர் ஆட்டத்தை இவர் மிக சிறப்பாக வெளிப்படுத்தினார். சீன முன்பு ஜடேஜா இருக்க அக்சர் ஏன்? என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அணியை வெற்றிபெற வைத்துள்ளார் அக்சர் பட்டேல்.












Click it and Unblock the Notifications