இதுதான் சென்னை.. உலக கோப்பை தோல்வியால்.. இந்தியாவே ஷாக்கில் இருந்த போது.. நம்ம ஊரில் நடந்த அதிசயம்
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வி காரணமாக இந்திய ரசிகர்கள் பலரும் ஷாக்கில் இருந்த நேரத்தில் சென்னையில் மட்டும் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் விளையாட்டை விளையாட்டாக பார்க்க கூடியவர்கள். உதாரணமாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பாபர் ஆஸம் பேச தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர்.

அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.
முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் சென்னையில் பாகிஸ்தான் ஆடிய போது இப்படி நடக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வந்த போது சென்னை ரசிகர்கள் அதை தீவிரமாக கொண்டாடினார்கள். முக்கியமாக பாபர் ஆஸம் ஆட வந்த போது சென்னை ரசிகர்கள் பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினார்கள். அதோடு நிற்காமல் சென்னை ரசிகர்கள் பலர் பச்சை நிறத்தில் பாகிஸ்தான் உடை அணிந்து வந்து கூட பாகிஸ்தான் அணியை கொண்டாடினார்கள்.
சென்னை ரசிகர்கள் பொதுவாகவே நல்ல கிரிக்கெட் அறிவு கொண்டவர்கள். மதம், அரசியல் பார்க்காமல் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்க கூடியவர்கள்., 1997ல் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 197 அடித்தார். அப்போது சென்னை ரசிகர்கள் அவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.
அந்த அளவிற்கு தமிழ்நாடு ரசிகர்கள் தன்மையானவர்கள். இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியிலும் சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட்: தமிழர்கள் இப்படி கிரிக்கெட்டை கொண்டாடுவதை உலகமே உணர்ந்த தருணம் அது. நேற்றும் கூட அது மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வி காரணமாக இந்திய ரசிகர்கள் பலரும் ஷாக்கில் இருந்த நேரத்தில் சென்னையில் மட்டும் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
அதன்படி நேற்று இந்தியா தோல்வி அடைந்தாலும் கூட நேற்று பட்டாசு வெடித்து ஆஸ்திரேலியாவிற்கு மரியாதையை செய்தனர். சென்னை மெரினா , வடபழனி, அசோக் நகர்,அண்ணா நகர், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் வாணவேடிக்கை வெடிகள் ஆஸ்திரேலியாவிற்கு மரியாதை செய்யும் விதமாக வெடிக்கப்பட்டது.
மெரினா, பெசன்ட் நகர் பீச்சில் மொத்தம் 5 ஆயிரம் பேர் வரை கூடி மேட்சை பார்த்தனர். அவர்கள் மேட்ச் முடிந்த பின் ஆஸ்திரேலியாவிற்கு கைதட்டினர். அதன்பின் வெடிகளை வெடித்து அவர்களின் வெற்றிக்கு கொண்டாட்டம் தெரிவித்தனர். தமிழ்நாடு ரசிகர்களின் இந்த செயல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications