Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கால்கள் நடுங்க.. போராடி வென்ற மேக்ஸ்வெல்லை.. பாஜகவினர் கொண்டாடுவது ஏன்? புது காரணமா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு நேற்று காரணமாக இருந்த மேக்ஸ்வெல்லை பாஜகவினர், இந்துத்துவா ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கால்கள் வலிக்க.. உயிரை பேட்டில் பிடித்துக்கொண்டு.. போராடி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்துள்ளார் மேக்ஸ்வெல். பொதுவாக இப்படி எல்லாம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று பொதுவாக சொல்லப்படும் ஒரு ஆட்டத்தில்.. ஆப்கானிஸ்தான் கையில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்து ஆஸ்திரேலியாவின் செமி பைனல் சீட்டை உறுதி செய்துள்ளார் மேக்ஸ்வெல்.

 Why Indian Hindus, BJPians celebrate Australia Glenn Maxwell innings against Afghanistan?

ஆஸ்திரேலியா கதை முடிஞ்சது பாஸ்.. ஆப்கானிஸ்தான் உண்மையிலேயே செமி பைனலுக்கு வரப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்.. நாங்க ஆஸ்திரேலியாடா.. மைட்டி ஆஸ்திரேலியா என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்துள்ளது.

ஆஸ்திரேலியா பொதுவாகவே டாப் ஆர்டர் சரிந்தாலும் கூட மிடில் ஆர்டர் சிறப்பாக ஆடி வெல்லும். மிடில் ஆர்டர் சரிந்தாலும்.. டெயில் எண்டர்கள் ஆட்டத்தை மாற்றி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைப்பார்கள். பழைய ஆஸ்திரேலியா அணி அப்படிதான் ஆடும். இந்த சீசனில் அதுதான் இதுவரை மிஸ் ஆனது. அதே பழைய ஆட்டத்தை கண் முன் நிறுத்தி மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்துள்ளார்.

வென்றது எப்படி?: நேற்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டது.

முக்கியமாக இப்ராஹிம் சத்ரான் தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடினார். சச்சின் ஸ்டைலில் இவர் ஆடிய சில ஷார்ட்டுகள், ஆங்கர் இன்னிங்ஸ் பெரிய அளவில் கவனம் பெற்றது. 129 ரன்களை இவர் 143 பந்துகளில் எடுத்தார். 8 பவுண்டரி 3 சிக்ஸ் அடித்தார். அதன்பின் கடைசியில் வந்த ரஷீத் கான் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 18 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை அதிர வைத்தார் .

இதன் மூலம் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 291-5 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மேக்ஸ்வெல் அதிரடி: இதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டாப் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடிய 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றியது.

மற்ற எந்த வீரரும் 30 ரன்கள் கூட தாண்டாத நிலையில் 201 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு நேற்று காரணமாக இருந்த மேக்ஸ்வெல்லை பாஜகவினர், இந்துத்துவா ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேக்ஸ்வெல் இந்து திருமணம்: கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொண்ட இந்திய பெண்மணி வினி ராமன் தமிழர் ஆவார். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினி ராமனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 21ம் தேதி இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

 Why Indian Hindus, BJPians celebrate Australia Glenn Maxwell innings against Afghanistan?

இவர்கள் இருவரும் இப்போது அல்ல கடந்த 2013லேயே சந்தித்துவிட்டனர். ஆம் அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். முதலில் வினி ராமனை கிளென் மேக்ஸ்வெல்தான் சந்தித்து பேசி இருக்கிறார். அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர். இந்த நிலையில் வினி மீதான தனது விருப்பத்தை கிளென் மேக்ஸ்வெல் 2017ல் தெரிவித்துள்ளார். அதை வினி ஏற்றுக்கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில்தான் இந்துவை மேக்ஸ்வெல் திருமணம் செய்துள்ளார்.. அவர் இந்து மதத்தினரை கொண்டாடுகிறார்.. இந்து கடவுளை கொண்டாடுகிறார். அதனால் அவர் இந்துதான். அவரின் இந்து மத வழிபாடுதான் அவரின் இந்த வெற்றிக்கும் காரணம் என்று கூறி இந்துக்கள், பாஜக ஆதரவாளர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+