Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடை இடையே ஓடி வந்த அஸ்வின்! க்ளூவே இல்லாமல் குழம்பிய ரோஹித்! இதுக்கு டீம்லயே எடுத்திருக்கலாம்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்தில் எப்படி விக்கெட் எடுப்பது என்றே தெரியாமல் க்ளூவே இன்றி காணப்பட்டார்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவது போல காணப்பட்ட இந்திய அணி இரண்டாவது பாதியில் மிக மோசமாக சறுக்கியது.

Why is captain Rohit Sharma looking clueless for Team India against Australia in the WTC Final 2023?

முக்கியமாக ஸ்மித், ஹெட் இருவரும் வேதாளம் போல இந்திய பவுலர்கள் முதுகில் தொங்கிக்கொண்டு இறங்காமல் நாள் முழுக்க ஆட்டம் காட்டினார்கள். நம்முடைய பவுலர்களும் எல்லா குறளி வித்தையும் காட்டி பார்த்தும்..குட்டி கரணம் அடித்து பார்த்தும் ஹெட் - ஸ்மித் விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை.

பொதுவாக இது போன்ற சமயங்களில் முக்கிய வியூகங்களை அமைத்து கேப்டன்தான் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நேற்று ரோஹித் சர்மாவே.. நோலன் படத்திற்கு பாதியில் வந்த ரசிகர் போல ஒன்றுமே புரியாமல் மைதானத்தில் முழித்துக்கொண்டு இருந்தார்.

இடை இடையே அஸ்வின்தான் வந்து பிட்ச் குறித்தும், வியூகம் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

தற்போது வரை முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டிற்கு 327 ரன்களை இழந்து ஆடி வருகிறது. முதல் நாளில் 90 ஓவர்களுக்கு பதிலாக 85 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. நேற்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் முதல் இரண்டு செஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பின் மோசமாக சொதப்ப தொடங்கியது.

இதில் சிராஜ் போக ஷரத்துல் ஷமி தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் அஸ்வினை எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதிலும் டிராவிஸ் ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

திணறல்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா கடுமையாக திணறி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.

Why is captain Rohit Sharma looking clueless for Team India against Australia in the WTC Final 2023?

இந்த போட்டியில் அஸ்வின் இடம்பெறாத நிலையில் அவர் வெளியே ரசிகர்கள் இல்லாத இடத்தில் அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டே மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்தார். இடை இடையே ஜூஸ் கொடுக்க சென்ற போதுதான் அவர் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தார்.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலர், டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான், லெப்ட் பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் அஸ்வினை இந்திய அணி டீமில் எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. கூடுதல் பேட்டிங் ஆப்ஷனுக்காக இந்திய அணி இப்படி ஷரத்துல், ஜடேஜாவை எடுத்து அஸ்வினை நீக்கி உள்ளது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

மேலும் 3வது நாளில் இருந்து பிட்ச் மேலும் காய்ந்து போய் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக மாறும். அதோடு பாஸ்ட் பவுலர்கள் அந்த கண்டிஷனில் பவுலிங் செய்வது சிரமமான காரியம் ஆகும். இதை கணிக்க இந்திய அணி தவறி உள்ளது. இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருந்திருந்தால்.. கடைசி 3 நாட்கள் அணிக்கு உதவியாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் நேற்று பீல்டில் ரோஹித் என்ன நடக்கிறதே என்ற க்ளூ இல்லாமல் இருந்தது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அஸ்வினை அணியில் எடுத்து இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+