டாப் ரன் ஸ்கோரர்.. முக்கியமான வீரரை அப்படியே ஒதுக்கிட்டாங்களே.. கெரியரே முடிஞ்சிடுச்சே.. ஷாக்கிங்
சென்னை: ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் இடம்பெறாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது. டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து இந்திய அணி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆடும் 11 பேர்: இந்த தொடரில் இந்திய அணியில் ஆடும் 11 பேர் வீரர்கள் பெரும்பாலும், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இல்லையென்றால் தொடக்க வீரராக கே. எல் ராகுல் இணையவும் வாய்ப்புகள் உள்ளன. காயத்தில் இருந்து முழுமையாக விடுபடாத கே. எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன.
. இவரை இனியும் ஓப்பனிங் இறக்க கூடாது. போதுமான அளவு வாய்ப்பு இவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அணியில் தொடர்ந்து நன்றாக ஆடி வந்த தவான் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் 2018 ஆசிய கோப்பை, 2017 சாம்பியன் கோப்பை, 2013 சாம்பியன் கோப்பை, 2015 உலகக் கோப்பை 50 ஓவர் தொடர் என்று வரிசையாக அதிக ரன்களை எடுத்த டாப் ஸ்கோர் வீரர் ஆவார்.
ஆனால் கே. எல் ராகுல் போன்ற வீரருக்காக தவான் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளார். அதே சமயம் பிசிசிஐ தரப்போ தவான் 2022ம் ஆண்டில் ஆடிய போட்டிகளில் மிக மோசமாக சொதப்பி உள்ளார். அதனால் அவர் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

2022ல் தவான் ஒருநாள் போட்டிகளில் எடுத்த ரன்கள் பின்வருமாறு,
29(38) vs SA
10(26) vs WI
9(26) vs ENG
1(3) vs ENG
13(31) vs WI
40(68) vs ZIM
4(16) vs SA
13(20) vs SA
8(14) vs SA
3(10) vs Nz
28(45) vs NZ
7(17) vs BAN
8(10) vs BAN
அவரின் ஸ்ட்ரைக் ரேட் 74க்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications