பிரச்சனையாகிடும்! வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தும்.. கொண்டாடாமல் அமைதியாக இருந்த ஷமி.. என்ன காரணம்?
சென்னை: நியூஸிலாந்திற்கு எதிராக நேற்று முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி உள்ளார். ஆனால் அவர் 3வது விக்கெட்டை எடுத்த போது அதை கொண்டாடாமல் அமைதியாக இருந்தார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக சென்ற நிலையில் தற்போது நியூசிலாந்து பேட்டிங்கில் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது.
அணி நிலவரம்; நேற்று ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை ஆகியோர் உள்ளனர்.

டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம். பந்து அதிகம் ஸ்விங் ஆகும். பனி காரணமாக பந்து வழுக்கினாலும் கூட பேட்டிங் செய்வது கடினம். இதனால் இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதன்பின்பும் 6.5 ரன் ரேட்டிற்கு குறையாமல் ஆடியது இந்திய அணி.
( சச்சின் காலில் விழு கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் உண்மையில் நடந்தது என்ன? வெளியான பரபர பின்னணி )
ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் சிக்ஸ், பவுண்டரி என்று ஆடினார். தொடக்கத்திலேயே 4 சிக்ஸ், 4 பவுண்டரி என்று ஆடினார். வெறும் 29 பந்தில் 47 ரன்களை ரோஹித் சர்மா எடுத்தார். இன்னொரு பக்கம் 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ரிட்டயர்ஹட் ஆகி கடைசி வரை களத்திலும் இருந்தார்.
அதே சமயம் ஒரு பக்கம் கோலி 113 பந்தில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி அடித்து 117 ரன்கள் எடுத்தார். 50வது ஒருநாள் சதம் அடித்து புதிய சாதனையும் படைத்தார். இந்த நிலையில் நியூசிலாந்து இறங்கி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து பேட்டிங்: இதில் தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.,
கேட்ச் விட்ட ஷமி: அதன்பின் பும்ரா வீசிய 29வது ஓவரின் 5வது பந்தில் ஷமி தன்னிடம் வந்த கேட்சை அப்படியே விட்டார் . 52 ரன்களில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை விட்டார். லாவகமாக கைக்கு, மிட் ஆஃப் திசையில் வந்ததை முகமது ஷமி மிஸ் செய்தார். இதனால் பரர்பாபு ஏற்பட்டது.

ஆனால் அதன்பின் கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். ஆனால் அந்த வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தும் கூட ஷமி அதை கொண்டாடவில்லை. அவர் மீது பழி போடப்படும்.. இந்தியா தோற்றால் அதற்கு அவர்தான் காரணம் என்று கூட "சிலரால்" சொல்லப்படும். என்னதான் இதற்கு முந்தைய போட்டிகளில் விக்கெட்டுகளை குவித்தாலும் இந்திய போட்டியில் கேட்ச் விட்டதால் அவர் மீது சிலர் விமர்சனங்களை வைப்பார்கள் என்பதால் அந்த விக்கெட்டை எடுத்தும் கூட ஷமி சந்தோசமாக இல்லை.
அதன்பின் டாம் லாதாம் விக்கெட்டை எடுத்த பின்புதான் ஷமி நிம்மதி அடைந்தார். அதன்பின்தான் அவர் விக்கெட்டை கொண்டாடினார். கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தும் அவர் அமைதியாக இருந்தது .. அவரின் வருத்தத்திற்கான காரணத்தை பலருக்கும் சொல்லாமல் சொல்லியது!
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications