Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சச்சின் காலில் விழு கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் உண்மையில் நடந்தது என்ன? வெளியான பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் செஞ்சுரி சதத்தை கோலி முறியடித்து உள்ள நிலையில் சச்சின் காலில் கோலி விழ வறுபுறுத்தப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் உலகில் மிக அதிக ஒருநாள் செஞ்சுரி அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 50 செஞ்சுரிகளை இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறித்துள்ளார்.

சச்சின் மொத்தமாக 100 சதங்கள் அடித்துள்ளார். இதில் 49 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து வந்தது. 51 சதங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்தது . இப்போது விராட் கோலி 29 டெஸ்ட் போட்டி சதங்களை அடித்துள்ளார். அதேபோல் 1 டி 20 சதம் அடித்துள்ளார். அதோடு நிற்காமல் 50 ஒருநாள் சதம் அடித்துள்ளார். மொத்தமாக 80 சதம் அடித்துள்ளார்.

Did Virat Kohli really fall on the feet of Sachin Tendulkar before his first ODI match debut?

கோலி சச்சினின் மொத்த சதங்களாக 100 ஐ முறியடிக்க இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும். இதில் இன்னும் 3-4 வருடங்கள் கோலி ஆடும் வாய்ப்புகள் உள்ளன. கோலி இதே பார்மில் தொடரும் பட்சத்தில் சச்சினின் இந்த சாதனையையும் முறியடிக்க முடியும். அவர் இருக்கும் பிட்னஸ் காரணமாக கண்டிப்பாக இதே பார்மில் தொடரும் வாய்ப்புகள் உள்ளன.

( தான் சுமந்தவனுக்கு முன்.. தலைவணங்கிய "கிங்" கோலி.. "காட்" சச்சின் தந்த அந்த ரியாக்சன்.. நெகிழ்ச்சி )

வணங்கினார்: சச்சின் சாதனையை அதே வான்கடே மைதானத்தில் நேற்று கோலி முறியடித்தார். அதிலும் சச்சினுக்கு முன்.. அவருக்கு தலைவணங்கி அவரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இதற்கு சச்சின் நெகிழ்ச்சியாக முகம் முழுக்க சிரிப்போடு.. அன்போடு கொடுத்த ரியாக்சன் பலரும் கவர்ந்தது. நீதான் ஹீரோ என்பது போல முத்தங்களை வாரி பொழிந்து அனுஸ்கா சர்மாவும் அன்புகளை பொழிந்தார்.

இந்த சாதனையை படைத்தும்.. சச்சினுக்கு முன் மட்டும் தலைவணங்காமல்.. தனது மனைவியிடமும் அன்பை வெளிப்படுதும் விதமாக கோலி கைகாட்டினார். டேவிட் பெக்கம் தொடங்கி உலகின் பல பிரபலங்கள் மேடையில் அவர்களுக்கு முன்பாக கோலி இந்த இமாலய சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் தான் ஒரு கோட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோலி!

Did Virat Kohli really fall on the feet of Sachin Tendulkar before his first ODI match debut?

காலில் விழ வேண்டும்: சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் செஞ்சுரி சதத்தை கோலி முறியடித்து உள்ள நிலையில் சச்சின் காலில் கோலி விழ வறுபுறுத்தப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி சச்சின் செய்துள்ள ட்விட்டில், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, ​​அணியில் உள்ள மற்றவர்கள் உன்னை என் கால்களில் விழுபடி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு விரைவில், உன்னுடைய ஆர்வத்தாலும் திறமையாலும்.. நீ இப்போது இதயத்தைத் தொட்டு விட்டாய். அந்த சிறுவன் இப்போது 'விராட்' வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில்.. அதிலும் எனது சொந்த மைதானத்தில் நீ அந்த சாதனையை செய்துள்ளாய் என்று சச்சின் பாராட்டி உள்ளார்.

Did Virat Kohli really fall on the feet of Sachin Tendulkar before his first ODI match debut?

என்ன நடந்தது?: உண்மையில் சச்சினை கோலி முதலில் சந்தித்த போது என்ன நடந்தது என்று கோலியே பழைய பேட்டி ஒன்றில் விளக்கி உள்ளார். அதில், நான் சச்சினை பார்க்கும் முன் 2 நாட்கள் அதற்காக தயாரானேன். அவரை பார்க்க வேண்டும் என்றே மனதை தயார் செய்தேன். முதல் நாள் அவரை பார்க்கும் முன் .. அவரின் காலில் விழ வேண்டும். அதுதான் சம்பிரதாயம் என்று சக வீரர்கள் சொன்னார்கள்.

யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் சொன்னார்கள். இதில் முனாப் பட்டேல் மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்லி என்னிடம் கூறினார். நான் அதை போலவே சச்சினை பார்த்ததும் காலில் விழ சென்றேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. நீ ஏன் இப்படி செய்கிறாய் என்றார்கள். நான் விளக்கினேன். இதை கேட்டதும்.. அவர் சிரிப்பை அடக்க முடியாமல் பேசி.. உன்னை அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.. நீ காலில் எல்லாம் விழ கூடாது என்று கூறினார்கள். இப்போது அதை நினைத்தால் சிரிப்பாக உள்ளது என்று கோலி கூறி இருந்தார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+