தான் சுமந்தவனுக்கு முன்.. தலைவணங்கிய "கிங்" கோலி.. "காட்" சச்சின் தந்த அந்த ரியாக்சன்.. நெகிழ்ச்சி
சென்னை; கிரிக்கெட் உலகில் அதிக ஒருநாள் சாதனை படைத்தவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சச்சினின் 49 ஒருநாள் சதம் என்ற சாதனையை கோலி முறித்து 50 சதம் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2011 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றதும்.. சச்சின் டெண்டுல்கரை இரண்டு பேர் தூக்கி சென்றனர். அதில் ஒருவர் ரெய்னா. இன்னொருவர் கோலி. சச்சின் 100வது சதம் அடிப்பார் ன்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்.. சச்சின் 100வது சதத்தை அன்று எட்டவில்லை என்றாலும் உலகக் கோப்பையோடு கோலி முதுகில் அமர்ந்து வான்கடே மைதானத்தை வலம் வந்தார்.
அதே வான்கடே மைதானத்தில்.. தன்னை சுமந்தவன் தனக்கே தலைவணங்கி.. தன் சாதனையையே முறையடிப்பான் என்று நினைத்திருக்க மாட்டார் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். ஆனால் அவரின் அதே சாதனையை அவரின் வான்கடே மைதானத்திலேயே முறியடித்து இருக்கிறார் கிங் கோலி.

கடந்த முறை வான்கடே மைதானத்தில் சதம் அடித்து இருந்தால் கோலி சச்சின் சாதனையை சமன் செய்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சச்சின் முன் அந்த சாதனையை செய்ய முடியாமல் கொல்கத்தா மைதானத்தில் கோலி சச்சின் சாதனையை சமன் செய்தார். அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.. சச்சின் சாதனையை அதே வான்கடே மைதானத்தில் இன்னும் 2 போட்டிகளில் முறியடிக்க போகிறார் என்று. அது இன்று நடந்துவிட்டது. சச்சினுக்கு முன்.. அவருக்கு தலைவணங்கி அவரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
( சச்சினை மட்டும் விமர்சிச்சாங்களே.. கோலியும்தான் செஞ்சுரிக்கு ஆடுறாரே? ஏன்? பின்னணியில் வேற காரணம்!)
இதற்கு சச்சின் நெகிழ்ச்சியாக முகம் முழுக்க சிரிப்போடு.. அன்போடு கொடுத்த ரியாக்சன் பலரும் கவர்ந்தது. நீதான் ஹீரோ என்பது போல முத்தங்களை வாரி பொழிந்து அனுஸ்கா சர்மாவும் அன்புகளை பொழிந்தார்.
சாதனை: இந்த சாதனையை படைத்தும்.. சச்சினுக்கு முன் மட்டும் தலைவணங்காமல்.. தனது மனைவியிடமும் அன்பை வெளிப்படுதும் விதமாக கோலி கைகாட்டினார். டேவிட் பெக்கம் தொடங்கி உலகின் பல பிரபலங்கள் மேடையில் அவர்களுக்கு முன்பாக கோலி இந்த இமாலய சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் தான் ஒரு கோட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோலி!
இந்த தொடரில் கோலியின் ரோல் மெதுவாக ஆடுவதுதான். அதற்கு ஏற்றபடி 100 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடினார். கோலியின் ரோல் மெதுவாக ஆடுவது. முக்கியமாக ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுவது. கடைசி வரை களத்தில் இருப்பது. எதிரில் விக்கெட் விழுந்தாலும்.. விக்கெட்டை இழக்காமல் ஆடுவது. ஒருவர் செஞ்சுரி அடித்தால் மொத்த அணியின் ஸ்கோர் கூடும்.. 230 அடிக்க வேண்டிய இடத்தில் எளிதாக 330 ரன்களை ஒரு செஞ்சுரி கொடுக்கும்.

இதனால்தான் அவர் மெதுவாக ஆட வேண்டும் என்று ரோல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக அணியில் கோலிக்கு கொடுக்கப்பட்டு ரோல் இதுதான். இந்திய அணியில் ஆங்கர் ரோல் சீனியர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கோலி. - ரோஹித் - கே எல் ராகுல் மூவரில் ஒருவர் கண்டிப்பாக ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக ரோஹித் வேகமாக தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார் என்றால் அதன்பின் கோலி மெதுவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்காமல் கடைசி வரை இருக்க வேண்டும்.
எதிரே விக்கெட் சென்றாலும் மெதுவாக ஆடி ரன் சேர்க்க வேண்டும். இந்திய அணியில் இந்த ஆங்கர் ரோல் இத்தனை காலம் மிஸ்ஸானது. அது மீண்டும் திரும்பி வந்துள்ளது. அதனால்தான் எதிரே விக்கெட் விழுந்தாலும் கோலி முடிந்த அளவு நிதானமாகவே ஆடி அணியின் ரன்னை உயர்த்தி வருகிறார். ரன் ரேட் பற்றி கவலைப்பட வேண்டாம்.. டீம் மொத்தமாக சரியாமல் பார்த்துகொள்ளங்கள் என்ற ரோல்தான் கோலிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதை உணர்ந்து கோலி மெதுவாக ஆடுவதோடு சதம் அடிப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.
-
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications