எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
மும்பை: கிரிக்கெட்டில், அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் சென்றார்கள்.. ஆனால், ஏன் சச்சின் டெண்டுல்கர் மட்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறார்.. இந்த கேள்வி 2கே கிட்ஸ் பலருக்கும் இருக்கும்.
தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா என சம கால ஜாம்பவான்களாகட்டும், கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, ஜாஹீர் கான் போன்ற பழைய தலைமுறை ஜாம்பவான்களாகட்டும், அவர்களுக்கிடையே என்றும் சச்சின் மட்டும் அதிகம் கொண்டாடப்படுவது ஏன் என்ற கேள்வி கூட 2கே கிட்சுகளுக்கு ஏற்படலாம்.

இந்த ஸ்பெஷல் அந்தஸ்தால்.. ஆற்றாமை இன்னும் ஒருபடி மேலே போய்.. சச்சின் சுயநலமாக ஆடியவர் என்று அறியாமையால் குமுறவும் கூடும். உண்மை அதுவல்ல. உண்மையிலேயே சச்சின் இந்திய நாட்டுக்கே ஷ்பெஷல் ப்ளேயர்தான். இனி எத்தனை வீரர்கள் வந்தாலும், அவர் "மட்டும்" கொண்டாடப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்.
ஒன் மேன் ஆர்மி: இதற்கு ஒரே காரணம்தான். மற்றவீரர்கள் 11 பேர் கொண்ட அணியில் ஆடினார்கள், அல்லது ஆடுகிறார்கள், ஆடப்போகிறார்கள். ஆனால் சச்சின் மட்டும்தான் 11 பேருக்கும் சேர்த்து ஒற்றை ஆளாக ஆடினார். இது கிரிக்கெட் பற்றி அரைகுறையாக புரிந்தவர்களுக்கு தெரியாது. ஆனால் விராட் கோலி போன்ற தொழில் முறை கிரிக்கெட் வீரனுக்கு தெரிந்திருந்தது.
விராட் கோலிக்கு தெரியும்: எனவேதான், "ஒற்றை ஆளாய் இந்த இந்திய அணியை தனது தோளில் தூக்கி சுமந்த அந்த கிரிக்கெட்டின் கடவுள் சச்சினை, நான் எனது தோளில் தூக்கி சுமந்தேன்.." என்று, கண்கள் கலங்க 2011 உலக கோப்பையை வென்றதும் வார்த்தையை உதிர்க்க முடிந்தது விராட் கோலியால். இன்று கோலியை சச்சினுடன் ஒப்பீடு செய்யலாம் இளைஞர்கள். ஆனால், கோலியே இதை ரசிக்க மாட்டார், வெறுப்பார் என்பதற்கு, அவரது வார்த்தைகளே வரலாற்று சாட்சியாக நிற்கிறது.
ஒற்றைச் சிம்மம்: கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு படம் ஃபேமஸ். 2003 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை சச்சின் பந்தாடுவார். அப்போது சச்சின் ஒரு பக்கம் நிற்க மொத்த பாகிஸ்தான் டீமும் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த போட்டோ இன்று வரை வைரல். ஒற்றை சிங்கத்தை எதிரே பார்த்ததும், காட்டிலுள்ள பிற விலங்குகள் அஞ்சி ஒடுங்கி நிற்பதற்கு, ஈடாக இருக்கும் அந்த காட்சி.

டிவிகள் வருகை: 1990கள் என்பது உலகமயமாக்கல் புண்ணியத்தால், எல்லோர் இல்லங்களுக்கும் டிவி பெட்டிகள் வரத் தொடங்கிய காலகட்டம். அதுவரை ரேடியோவில் வர்ணனையாக மட்டுமே கிரிக்கெட்டை கேட்ட பலரால், வீட்டுக்குள்ளேயே வீரர்களை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. எனவே, அவர்களுடன் உறவு கொண்டாட முடிந்தது. இது சச்சினை தனது அண்ணன், சித்தப்பா போன்ற உறவுகளோடு பொருத்திப் பார்க்க வைத்தது. சிலருக்கு அவர் காதலராகவும் இருந்திருக்கலாம். இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான காலகட்டமும் அதுதான். கவாஸ்கர், பிறகு கபில்தேவ் என ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று அல்லது பெறத் தொடங்கிய காலகட்டம். அங்கு சச்சின் மட்டுமே தனித்து காட்சியளித்தார். டிவியில் கிரிக்கெட்டை பார்க்க முடிந்ததால் வீரர்களின் சிறு தவறும் பிரமாண்டமாக தெரிந்தது. எனவேதான், "கேட்சை விட்டான் பாரு, இதைக் கூட பிடிக்க முடியாம எதுக்கு விளையாட வாரீங்க.." என சத்தம் போட்டு டிவியை பார்த்து ரசிகர்கள் உரிமையோடு திட்டினார்கள். தினமும் திட்டு வாங்காத மேட்சே இருக்காது எனும் அளவுக்கு இந்திய அணி மட்டமாக ஆடியது.
இந்திய அணியின் மோசமான நிலை: 120 கி.மீ வேகத்தில் வீசும் வெங்கடேச பிரசாத், குருவிலா போன்றவர்களெல்லாம் "வேகப்பந்து வீச்சாளர்கள்" என அழைக்கப்பட வேண்டிய துரதிருஷ்ட காலகட்டம் அது. அத்தி பூத்தது மாதிரி இவர்கள் ஏதோ ஒரு பந்தை ஒழுங்காக போட்டாலும் அந்த கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டு முகத்தை தொங்க போடும் ஃபீல்டர்கள் ஒரு பக்கம், சாதாரண பந்தை கூட அடிக்கத் தெரியாமல் அவுட்டாகும் பேட்ஸ்மேன்கள் மறுபக்கம் என ஏன்டா டிவி வாங்கினோம் என கதற வைப்பார்கள் அப்போதைய இந்திய அணியினர். அத்தனை பேருக்கு மத்தியில் இது அத்தனை டிபார்ட்மென்ட்டிலும் ஒத்தை ஆளு, கெத்தாக தெரிவார் பாருங்க அவர்தான் சச்சின். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்கள் வீட்டு பணத்தையெல்லாம் வீணடித்து ஊரில் கெட்ட பேரு வாங்கும்போது, அந்த குடும்பத்தில் ஒருத்தர் மட்டும் படித்து பெரிய பொறுப்பில் இருந்து குடும்பத்தை காக்க போராடினால் எப்படி மதிப்பு கிடைக்குமோ அதே மதிப்புதான் சச்சினுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் ஆன்மா: ஆயிரம் நண்பர்களுக்கு மத்தியில் ஒரு சிலர்தான் ஆத்மார்த்த நண்பர்களாக இருப்பார்கள். சச்சின் அப்படியான ஒருவர். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றாலும், கேபிள் டிவிகள் வருகையாலும், இந்திய இளைஞர்கள் வேக வேகமாக எழுச்சி பெற்ற காலகட்டம் 1990கள். அப்போது தங்களது எழுச்சி நாயகனை அவர்கள் திரையில் தேடினர், மைதானங்களில் தேடினர். ஷாருக்கான், ஏஆர் ரஹ்மான், அரவிந்த் சாமி, அட்னன் சாமி, பாப் பாடல்கள், பிரபு தேவா, விஜய், அஜித், ஷங்கர், எம் டிவி, பேஷன் டிவி என அவர்களுக்கு திரையில் தேடலுக்கு பல விடைகள் கிடைத்தன. மைதானத்தில் இருந்த ஒரே நபர் சச்சின் மட்டுமே. அவரை தவிர பாசிட்டிவிட்டியை தர அங்கு யாருமே இல்லை. எனவேதான் சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்ததால் மைதானத்திலேயே தீ வைத்து கொளுத்தினர், அவர் வந்து சொன்ன பிறகுதான் மேட்சையே நடக்க விட்டனர்.
சச்சின் பிறந்த நாள்: இன்று இந்திய அணி என்ற அந்த குடும்பத்தில் பல டாக்டர்கள், பல விஞ்ஞானிகள், பல பட்டைய கணக்காளர்கள் உள்ளனர். ஆனால், வாழ்ந்து கெட்ட குடும்பமாக இருந்தபோது, வாடிவிடாமல் காத்த ஒரே ஜீவன் சச்சின்தானே. எனவேதான் அவர் ஸ்பெஷல். எனவேதான் அவர் மட்டும் அப்படி கொண்டாடப்படுகிறார். இன்று எந்த பிளேயராவது அவுட்டானால் மொபைலை ஆப் செய்கிறோமா, சேனலை மாற்றுகிறோமா, ஆனால் அன்று சச்சின் அவுட்டானபோது மொத்த இந்தியாவும் மொத்தமாக டிவியை ஆப் செய்துவிட்டு வேறு வேலையை பார்க்க கிளம்பினார்களே.. அது போதாதா இவன் யார் என்று இந்த வரலாறு உள்ளவரை தெரிய வைக்க? Happy Birth Day Sachin!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications