ஷாக்கடித்த காவிரி.. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு சிக்கல்?
சென்னை: 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளுக்கு பிரச்சனை வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி மோதல் உச்சம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் காவிரி திறப்பிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு கர்நாடக இடையே காவிரி பகிர்வு மோதல் மீண்டும் உச்சம் எடுத்துள்ளது. காவிரி டெல்டா குறுவை சாகுபடிகளைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் இதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த முறை தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் இந்த முறை திறந்துவிடவே முடியாது. கர்நாடகாவில் தண்ணீரே இல்லை, தமிழ்நாட்டிற்கு நாங்கள் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறியது. ஆனால் விசாரணை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சென்ற நிலையில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறந்துவிடலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் அதன்பின் மீண்டும் காவிரி திறப்பிற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் காவிரி இருப்பு ஆய்வு செய்யப்பட்டு வினாடிக்கு 3,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறந்துவிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கும் கர்நாடக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு எதிராகவும் வழக்கு தொடுக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.
அதேபோல் மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக வழக்கு தொடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே காவிரி விவகாரங்கள் காரணமாக தமிழ்நாடு திரைப்படங்களை வெளியிடுவது, தமிழ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது, தமிழ்நாட்டு வாகனங்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.
காவிரி கிரிக்கெட்: இன்னொரு பக்கம் காவிரி விவகாரம் காரணமாக தமிழ்நாட்டில் இது போன்ற மோசமான போராட்டங்கள், கலவரங்கள் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் சென்னையில் இந்த வருடம் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1987 (பாகிஸ்தானுடன்), 1996 (பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன்), மற்றும் 2011 (இலங்கை மற்றும் வங்கதேசத்துடன்) உலகக் கோப்பையை இணைந்து நடத்திய பிறகு, 2023 இல் இந்தியா முதல்முறையாக தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளது மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, சென்னை, புனே, தர்மசாலா, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய பத்து இடங்களில் பத்து அணிகள் 45 ரவுண்ட்-ராபின் லீக் ஆட்டங்களில் விளையாடும்.
மும்பை மற்றும் கொல்கத்தா அரையிறுதிப் போட்டிகளையும், அகமதாபாத் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியையும் நடத்தும். இதில் சென்னையில் முக்கியமான 5 போட்டிகள் நடக்க உள்ளன. அதில் இந்தியா ஆடும் ஒரே ஒரு போட்டி ஆட உள்ளது.
- அக்டோபர் 8: இந்தியா v ஆஸ்திரேலியா, மதியம் 2 மணி
- அக்டோபர் 13: பங்களாதேஷ் v நியூசிலாந்து, மதியம் 2 மணி
- அக்டோபர் 18: நியூசிலாந்து v ஆப்கானிஸ்தான், பிற்பகல் 2 மணி
- அக்டோபர் 23: ஆப்கானிஸ்தான் v பாகிஸ்தான், பிற்பகல் 2 மணி
- அக்டோபர் 27: பாகிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா, பிற்பகல் 2 மணி
இந்த நிலையில்தான் காவிரி பிரச்சனை காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக இதேபோல் காவிரி பிரச்சனை வந்த போது 2018ல் சேப்பாக்கம் போட்டிகள் ரத்தானது. இந்த முறையும் அதேபோல் ஆகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முக்கியமாக இந்திய அணியில் கர்நாடக வீரர் கே. எல் ராகுல் ஆடுவதால் சென்னை போட்டிகளில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications