இவர் எல்லாம் கேப்டனே இல்லை.. கோலின்னு நினைப்பு! தூக்கி அடிக்கப்படும் "பாபர்"?.. பாக். அணியில் திடுக்
சென்னை: பாகிஸ்தான் அணியில் பல்வேறு மோதல்கள் எழுந்துள்ளது. அந்த அணியின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பின் கேப்டன் பாபர் ஆஸம் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பையில் மிக முக்கியமான அணியாக இருக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் இந்திய பிட்ச் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருக்கும். கிட்டத்தட்ட பாகிஸ்தான் போல இதுவும் பிளாட் டிராக். கொஞ்சம் வழக்கமான பிட்ச் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய பிட்ச் இந்த முறை கூடுதல் புற்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. சில பிட்சுக்கள் ஸ்லோ பிட்சாக மாறி உள்ளது. இதனால் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது. இதனால்தான் என்னவோ பாகிஸ்தான் அணி மிக மோசமாக இந்த சீசனில் ஆடி வருகிறது.
2 போட்டிகளில் மட்டுமே இதுவரை வென்றுள்ளது. 5 போட்டிகளில் ஆடி பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கூட தோல்வி அடைந்தது.
செமி பைனல் சந்தேகம்: இதனால் பாகிஸ்தான் அணி செமி பைனலுக்கு செல்வது கூட சந்தேகம் ஆகி உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்தே பாபர் ஆஸமை நீக்க வேண்டும். அவரின் ஆட்டம் மோசமாக உள்ளது. கேப்டன்சி சரியாக இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாபர் ஆஸம் பெரும்பாலும் பாகிஸ்தான் அணியின் கோலி என்று வர்ணிக்கப்படுபவர். அதோடு அவரின் கேப்டன்சியும் கோலியின் டெஸ்ட் கேப்டன்சியோடு ஒப்பிடப்படும். இந்த நிலையில்தான் தற்போது பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
நீக்கம்: வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக், ரமிஸ் ராஜா, ரஷித் லத்தீப், முஹம்மது ஹபீஸ், ஆகிப் ஜாவேத், ஷோயப் மாலிக், மொயின் கான் அல்லது ஷோயப் அக்தர், ஆகியோர் பாபர் ஆசமை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தான் தோல்விகளுக்கு பாபர்தான் காரணம் என்று குற்றம் சாட்டி விமர்சனம் வைத்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ஷாஹீன்தான் சிறந்த சான்ஸ் . வெள்ளை பந்து போட்டிகளில் தன்னை ஒரு திறமையான கேப்டனாக நிரூபிக்க பாபர் தவறிவிட்டார். ஷாஹீன் அப்ரிடி சிறந்த கேப்டனாக பிஎஸ்எல் தொடரில் தன்னை நிரூபித்து உள்ளார். பாபர் போல அவர் சாந்தமான கேப்டன் கிடையாது. அவர் அக்ரஸிவ் கேப்டன்.
அவர் வலிமையான முடிவுகளை எடுக்க கூடியவர். அவர் பாபர் போல இல்லாமல்.. வேகமாக முடிவுகளை எடுக்கும் நபர். அதனால் ஷாஹீன் அப்ரிடியை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஒரு கேப்டனாக பாபர் தன்னை நிரூபிக்க தவறிவிட்டார்.
அதோடு அவரின் முடிவுகள் அணிக்கு பலன் அளிக்கவில்லை. அவர் அணியை வழிநடத்த வேண்டும். ஆனால் அவர் மைதானத்தில் பல நேரங்களில் அமைதியாக இருக்கிறார். ஏதாவது பேசினால் கூட அவரின் முடிவுகள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன. அதனால் அவரை நீக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக், ரமிஸ் ராஜா, ரஷித் லத்தீப், முஹம்மது ஹபீஸ், ஆகிப் ஜாவேத், ஷோயப் மாலிக், மொயின் கான் அல்லது ஷோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications